தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் மெல்ல குறைந்து வந்தாலும் புதிய அதிதீவிர கரோனா பரவல் அச்சத்தை அதிகரிக்கவே செய்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு சுகாதாரத் துறையில் பணியாற்றுவோர் தங்களது கருத்துகளை வெளியிட்டிருக்கும் நிலையில், தேசிய தொற்று நோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குநர் பிரதீப் கௌர் இது ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.
இது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, உள்ளரங்கில், காற்றோட்டம் இல்லாமல், அதிக நேரம், கூட்டமாக, கத்திக் கொண்டு, பேசிக் கொண்டு, முகக்கவசம் அணியாமல் இருப்பது மிக மோசமான ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
அந்த வரைபடத்தில், குறைந்த நபர்களுடன் அமைதியாக காற்றோட்டம் இல்லாமல் இருந்தாலும் தொற்று அபாயம் குறைவு
அதே வேளையில், உள்ளரங்கில், காற்றோட்டம் இல்லாமல், அதிகக் கூட்டம், அதிக நேரம் இருந்து அமைதியாக இருந்தாலும் கரோனா தொற்றுப் பரவும் அபாயம் அதிகம்.
மேலும், உள்ளரங்கில் காற்றோட்டம் இல்லாமல், அதிகக் கூட்டம், அதிக நேரம், கத்திக் கொண்டு இருந்தால், கரோனா பாதிப்பு தீவிரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.
இதனை விளக்கும் வகையில் ஒரு புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.