2020-2021ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்விற்கு பெயர்ப்பட்டியல் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து , கடந்த மார்ச் 2020 - ல் நடைபெற்ற மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விற்கு தயாரிக்கப்பட்ட பெயர்ப் பட்டியலினை ( Nominal Roll ) அடிப்படையாகக் கொண்டு , 2020-2021 ஆம் கல்வியாண்டின் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது.
எனவே , இது குறித்தான பின்வரும் அறிவுரைகளை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பிவைத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் 27.01.2021 பிற்பகல் முதல் 01.022021 வரையிலான நாட்களில் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று தங்கள் பள்ளிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் Password- ஐ பயன்படுத்தி 2020-2021- ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள தங்களது பள்ளி மாணாக்கரின் நிரந்தரப் பதிவெண் , பெயர் , பிறந்ததேதி , பாடத்தொகுதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
+2 NR Preparation 2021 - DGE Proceedings Download here...