வாடிக்கையாளரிடம் இருப்பது ஒரிஜினல் இன்சூரன்ஸ் ஆவணமா என நிறுவனங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கூறியுள்ளது. வாகன காப்பீடு மோசடி விவகாரத்தில் அரசு, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு சென்னை போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். மேலும் போலி வாகன இன்சூரன்ஸ் ஆவணம் இருந்தால் தகவல் தரவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உத்தரவிட்டுள்ளது.