இந்த ஆண்டின் வருமான வரி வரம்புகளில் மாற்றம் ஏதும் உண்டா. பட்ஜெட்டில் அறிவிப்பு எதுவும் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.வருமான வரி செலுத்துவது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும். வருமான வரிச் சட்டம், 1961-இன் கீழ், ஒரு வருடத்தில் நீங்கள் சம்பாதித்த வருமானத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு அரசிற்கு வரியை நீங்கள் செலுத்த வேண்டும். இந்தியாவில்,வருமான வரி என்பது ஒரு நபரின் வருமானத்தின் அடிப்படையில் வசூலிக்கப்படும் கட்டணம் ஆகும். இந்த வரி விகிதங்கள் வருமான ஸ்லாப்ஸ் னப்படும் வருமான வரம்பை அடிப்படையாக கொண்டவை.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்ற அவையில் தாக்கல் செய்யவுள்ளார். இந்த நிலையில் வரிச்சலுகைகள் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் மாற்றப்படுகின்றன. அந்த வகையில் இந்தாண்டு ஏதேனும் மாற்றம் உள்ளதா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, 2021-22 நிதியாண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தின் போது தனிநபர் வருமான வரி ஸ்லாப்ஸ் மத்திய அரசு மாற்றம் செய்ய வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும், பிற நடவடிக்கைகள் மூலம் வருமான வரி நிவாரணம் வழங்குவது குறித்து நிதி அமைச்சகம் பரிசீலித்து வருவதாக சில செய்திகள் தெரிவித்துள்ளது. தற்போதைய வரிச்சலுகைகள் ரூ. 2.5-5 லட்சத்திற்கு இடையிலான வருமானத்திற்கு 5 சதவீதமும், ரூ. 5-10 லட்சத்திற்கு 20 சதவீதமும், ரூ .10 லட்சத்தை விட அதிக வருமானத்திற்கு 30 சதவீதத்தை கொண்டுள்ளது.
புதிய வரி ரெஜிமை தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு விகிதங்கள் சற்று வேறுபடுகின்றன. மலிவு வீட்டுவசதி பிரிவில் ஹவுஸ் ஓனர்களை ஊக்குவிக்க வருவாய் துறை அதிக வரி சலுகைகளை கொண்டுவந்துள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. பிரிவு 80C இன் கீழ் விலக்குகளுக்கான வரம்பை தற்போதைய ரூ .1.5 லட்சத்திலிருந்து ரூ .2 லட்சமாக உயர்த்துவதற்கான கோரிக்கைகளையும் நிதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
தற்போதைய ரூ .25,000 வரம்பைத் தாண்டி பிரிவு 80D இன் கீழ் சுகாதார காப்பீட்டு பிரீமியத்திற்கான விலக்கு வரம்பை உயர்த்துவதற்கான திட்டத்தையும் மத்திய அரசு மதிப்பீடு செய்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.