வேலூர் மாவட்ட முதன்மைக்கல்விஅலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண்.0033/ஆ1/2020, நாள் 05.01.2021
பொருள் :
பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் – பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகேட்பு கூட்டம் நடைபெறுதல் அறிவுரைகள் – சார்பு.
பார்வை :
சென்னை-6, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.34462/பிடி1/இ1/2020, நாள் 04.01.2021 - -
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள், பள்ளிகள் தற்போது 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் கல்வி நலன் கருதி பொதுத்தேர்வு எதிர்கொள்ள ஏதுவாக மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என்பதால், பள்ளி திறந்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்பிப்பது இன்றியமையாதது ஆகும். எனவே, உடனடியாக இன்று (05.01.2021) முதல் 07.01.2021-க்குள் அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து பொங்கல்விடுமுறை முடிந்த பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து COVID-19 வரைவு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறப்பது சார்ந்து கருத்துகேட்பு கூட்டம் பள்ளிகளின் வசதிக்கேற்ப உரிய தேதிக்குள் நடத்தப்பட வேண்டும் என அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து பொங்கல் விடுமுறை முடிந்த பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்தும், அவ்வாறு திறக்கும்போது COVID-19 வரைவு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவது குறித்தும் கருத்துக்கள் பெறப்பட வேண்டும்.
கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும்போது மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில் பெற்றோர்கள் அதிகமாக பங்கேற்க வாய்ப்பு உள்ளதால் அச்சமயத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு தனித்தனியாக கோவிட்-19 முன்னெச்சரிக்கை குறித்து அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு கருத்துக்கேட்புக்கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
மேலும், மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து ஏகமனதாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை தொகுத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளித்தலைமையாசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி/ சி.பி.எஸ்.இ./ தனியார் பள்ளி முதல்வர்கள்/ நிர்வாகிகள், பெற்றோர்களின் கையொப்பம் பெற்று 07.01.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் தனி நபர்மூலம் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு : COVID-19 வழிகாட்டு நெறிமுறைகள்
முதன்மைக்கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/
பள்ளி முதல்வர்கள்
நகல்
1) கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி காந்திநகர், காட்பாடி
2) மாவட்டக்கல்வி அலுவலர், வேலூர்
3) வட்டாரக்கல்வி அலுவலர்கள், வேலூர்
நகல்
1) வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர்கள்
2) வட்டாரவள மைய மேற்பார்வையாளர்கள், வேலூர் மாவட்டம் –
- [ஏற்கனவே நவம்பர் 2020-ல் கருத்துக்கேட்புக்கூட்டம் நடத்த ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளிலேயே மீளவும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள நாட்களுக்குள் பள்ளிகளுக்கு சென்று கருத்துக்கேட்புக்கூட்டம் நடைபெறுவதை பார்வையிட்டு அதன் அறிக்கையினை தொகுத்து அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.]