CPS திட்டத்தை ரத்து செய்வது குறித்து வல்லுநர் குழு பரிந்துரைகள் படி பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் தனிப்பிரிவில் பெற்ற தகவல்


01.04.2003 அன்றோ அதன் பின்னரோ முறையான அரசுப் பணியில் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு " 27.11.2018 அன்று தனது அறிக்கையினை அரசிடம் அளித்துள்ளது.

அதன் பரிந்துரைகளை அரசு பரிசீலித்து உரிய முடிவினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அடிப்படையில் அரசாணைகள் வெளியிடப்படும். எனவே , தற்போது தங்களது கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல என்ற விவரம் தங்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive