*பள்ளிக் கல்வி – அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் – அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அருகாமையிலுள்ள – முன்னாள் மாணவர்கள், பல்வேறு நிறுவனங்கள் மூலம் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR) மூலம் உள்கட்டமைப்பு, சுற்றுச் சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் – 2016 ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை பெறப்பட்ட நிதி மற்றும் பயனடைந்த பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வி (இணை இயக்குநர் இடைநிலைக் கல்வி) உத்தரவு!!!*
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் ( இடைநிலைக் கல்வி செயல்முறைகள் , சென்னை B00006 . நக.எண் .074 பிடிஇ 1 / 2019 , நான் , 25.012021 பொருள் : பள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அருகாமையிலுள்ள முன்னாள் மாணவர்கள் . பல்வேறு நிறுவனங்கள் மூலம் சமூகப் பொறுப்புணர்வு நிதி ( CSR ) மூலம் உள்கட்டமைப்பு சுற்றுச் சுவர் , வர்ணம் பூசுதல் , இணையதள வசதிகள் , சுகாதாரமான கழிவறைகள் , ஆய்வகங்கள் , நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் - 2016 ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை பெறப்பட்ட நிதி மற்றும் பயனடைந்தபள்ளிகள் விவரம் கோருதல் - சார்பாக , பார்வை : செயல்முறைகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் ந.க.எண் .074 / பிடிஇ 12019 , நாள் : 25.04.2019 . பார்வையில் காணும் செயல்முறைகளின் மீது அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்கப் படுகிறது . தமிழக அரசு , அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளில் இருக்கும் முன்னாள் மாணவர்களும் , தற்போது தொழில் அதிபர்களாக உள்ள முன்னா ar மாணவர்களும் , சமுக அக்கறை கொண்ட நிறுவனங்களும் ( NGO ) தங்களது சமூகப் பொறுப்புணர்வு நிதி ( CSR ) மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை தத்தெடுத்து பள்ளிகளின் உள் கட்டமைப்பு சுற்றுச் சுவர் , வர்ணம் பூசுதல் , இணையதள வசதிகள் , சுகாதாரமான கழிவறைகள் , ஆய்வகங்கள் , நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வாருங்கள் என்று அழைப்பு விடுத்து இதன் மூலம் பல அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பயன்பெற்றுள்ளது . 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரைசமூக பொறுப்புணர்வு நிதி ( CSR ) மூலமாக அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மேம்பாட்டிற்கான பெறப்பட்ட நிதிகள் விவரம் , பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விவரம் மற்றும் பயனடைந்த பள்ளிகளின் விவரத்தினை இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள படிவங்கள் 1 மற்றும் 11 ல் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான தனித்தனி படிவத்தில் பூர்த்தி செய்து உடன் இவ்வியக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் . இணைப்பு : படிவம் 1 மற்றும் II ஓம் / சசுகன்யா இணை இயக்குநர் ( இடைநிலைக் கல்வி ) பெறுநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் . D.2021 Year Files PDS +