நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது
கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்க, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவீதமும், தமிழக பாடத்திட்டத்தில் 40 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் நாடு முழுமைக்கும் ஒரே தேர்வாக எழுதக்கூடிய நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.
அதற்கு பதிலளித்துள்ள மத்திய கல்வி அமைச்சகம் கடந்த ஆண்டை போலவே, மாணவர்கள் முழு பாடத்தையும் படித்தாக வேண்டும் எனறும், கூடுதல் கேள்விகள் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.