பள்ளிகள் திறந்த முதல் நாளான நேற்று தமிழகம் முழுவதும் 80 சதவீதம் மாணவ-மாணவிகள் வந்திருந்தனர்.
பள்ளிகள் திறந்த முதல் நாளில் மாணவர்கள் வருகை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகம் முழுவதும் 80 சதவீதம் பேர் வருகை புரிந்துள்ளனர். சென்னையில் அரசு, மாநகராட்சி பள்ளிகளில் அதிகளவு மாணவ-மாணவிகள் வந்திருந்தனர்.
தனியார் பள்ளிகளிலும் ஒரு சிலரை தவிர பெரும்பாலான மாணவர்கள் வகுப்பிற்கு வந்தனர். வெளியூர் சென்றவர்கள், உடல்நலம் பாதித்தவர்கள் தவிர ஏனைய மாணவ-மாணவிகள் வருகை தந்தது பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு மகிழ்ச்சி அளித்தது.
பெற்றோர் கையொப்பமிட்ட விருப்பக்கடிதத்தை, பள்ளியில் கொடுத்துவிட்டு வகுப்புக்கு சென்றனர். மாணவர்களின் வருகைப்பதிவேடு முக்கியமல்ல. அவர்கள் விருப்பப்பட்டால் வீட்டில் இருந்து படிக்கலாம் என்று அரசு அறிவித்து இருந்தாலும் கூட பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி உள்ளனர்.
Post Top Ad
Tuesday, January 19, 2021
Home
Unlabelled
Tamil Nadu Schools Reopen latest News - முதல் நாள் வருகைப் பதிவு எவ்வளவு தெரியுமா?