தமிழகத்தில் டி.ஆர்.பி., தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணிநியமனம் செய்யப்படாததால் முதுகலை பொருளியல் ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 210 முதுகலை பொருளியல் ஆசிரியர் பணியிடங்களுக்கு 2019, செப்., 27ல் எழுத்து தேர்வு நடந்தது.
விடைக்குறிப்பில் 21 வினாக்கள் தவறாக இருந்ததால் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் உத்தரவின்பேரில் அனைவருக்கும் மதிப்பெண்ணில் மாற்றம் செய்யப்பட்டது. அதிக மதிப்பெண் பெற்ற 132 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர்.
2020 பிப்.,ல் 87 பேருக்கு நியமன உத்தரவு வழங்கப்பட்டது. 35 பேர் ரிசர்வில் வைக்கப்பட்டனர். அவர்கள் இதுவரை நியமனம் செய்யப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றனர். அவர்கள் கூறுகையில் "டி.ஆர்.பி.,யில் கேட்கும்போதெல்லாம் பட்டியல் தயாராக உள்ளது என மட்டும் கூறுகின்றனர். விரைவில் நியமன உத்தரவு வழங்க வேண்டும்" என்றனர்.