24.01.2021 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு வருகைபுரியும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலினைத் தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 18.01.2021 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . எனவே , ஒவ்வொரு தேர்வு மைய கண்காணிப்பாளர்களும் தவறாமல் பெயர்ப்பட்டியலினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . பதிவிறக்கம் செய்தவுடன் தேர்வுமையக் கண்காணிப்பாளர்கள் தேர்வு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள் மற்றும் தேர்வர்களின் எண்ணிக்கை சரியாக உள்ளதா என்பதையும் அம்மையத்திற்குட்பட்ட அனைத்து தேர்வர்களுக்கும் பெயர்ப்பட்டியல் பெறப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
DGE Proceedings - Download here...