உதவிப் பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான நெட் தேர்வு அறிவிப்பு


இந்திய அரசின் மனிதவளத் துறையின்கீழ் செயல்படும் தேசிய தேர்வாணையத்தால் நடத்தப்படும் UGC-NET EXAM-2021 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து மார்ச் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தேர்வு: UGC-NET EXAM-2021 தகுதி:கலை, அறிவியல், மேலாண்மையியல், பொருளாதாரம், மானுடவியல் போன்ற துறையைச் சேர்ந்த ஏதாவதொரு பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளை இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும். இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் தேதியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC, ST, OBC, Non-Creamy Layer பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் NET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: NET தேர்வு எழுதி கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரிய விரும்புபவர்களுக்கு உச்ச வயதுவரம்பில்லை. இளநிலை ஆராய்ச்சியாளராக விரும்புபவர்கள்(JRF) 31 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, ST,OBC, PWD, Transgender பிரிவினருக்கு 5 ஆண்டு சலுகை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு முறை: NET தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. முதல் தாள் 100 மதிப்பெண்கள் கொண்டது. விண்ணப்பத்தாரரின் கற்பிக்கும் திறனை சோதிக்கும் வகையில் 50 வினாக்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு 1 மணி நேரம் கொண்டதாக இருக்கும். இரண்டாம் தாள் 200 மதிப்பெண்கள் கொண்டது. 100 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். தேர்வு 2 மணி நேரம் கொண்டதாக இருக்கும். தேர்வு கணினி வழி ஆன்லைன் தேர்வாக இருக்கும். 
தமிழகத்தில் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குசி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், விருதுநகர் 
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.1000, OBC,EWS பிரிவினர் ரூ.500, SC,ST,PWD,Transgender பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை:www.ntanet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.03.2021 
மேலும் விவரங்கள் அறிய www.ntanet.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

CBSE பள்ளிகளுக்கான இணைப்பு நடைமுறைகளில் மாற்றம்!



சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரிய செயலர் அனுராக் திரிபாதி வெளியிட்ட அறிவிப்பு:சி.பி.எஸ்.இ.,யில் இணைப்பு அந்தஸ்து பெறும் பள்ளிகளுக்கான நடைமுறைகளில், மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. 

புதிய இணைப்புகள், இணைப்பை புதுப்பித்தல், இணைப்பை நீட்டித்தல் போன்ற விண்ணப்பங்களுக்கு, தனித்தனியே தீர்வு காணப்பட உள்ளது.இது தொடர்பாக, பள்ளி நிர்வாகத்தினருக்கு, 'ஆன்லைன்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய இணைப்பு பெறுவோருக்கு, 9, 10ம் தேதியும்; இணைப்பு அந்தஸ்தை உயர்த்திக் கொள்வோருக்கு, மார்ச் 12; இணைப்பைநீட்டிப்போருக்கு, மார்ச் 13லும், ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படும்.
கூடுதல் விபரங்களை, www.cbse.nic.inஎன்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் COVID_19 தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் -படிவம் பூர்த்தி செய்யக் கோருதல் சார்ந்து நாகை முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்


நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் / வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் , அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை | பட்டதாரி | தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகப் பணியாளர்கள் , ஆசிரியர் பயிற்றுர்கள் அனைவருக்கும் 02.03.2021 செவ்வாய் கிழமை மற்றும் 03.03.2021 புதன் கிழமை ஆகிய நாட்களில் கோவிட் -19 தடுப்பூசி போடப்பட உள்ளது. மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை / சிறப்பாசிரியர்கள் / பட்டதாரி / தொழிற்கல்வி / கணினி / முதுகலை ஆசிரியர்கள் , தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் 04.03.2021 வியாழன் மற்றும் 05.03.2021 வெள்ளிக் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் கோவிட் -19 தடுப்பூசி போடப்பட உள்ளது.

மேலும் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்துவகை பணியாளர்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசி போடப்பட உள்ளது . மேற்காண் தேதிகளில் விடுபட்டவர்களுக்கு 06.03.2021 சனிக்கிழமை அன்று தடுப்பூசி போடப்பட உள்ளது . எனவே ஒன்றியம் வாரியாக கோவிட் -19 தடுப்பூசி போடுவதற்கு தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டி நெறிமுறைகளின்படி பள்ளிகளை தெரிவு செய்து கீழ்க்குறிப்பிட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து மறு மின்னஞ்சலில் ( முதன்மைக்கல்வி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ) அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் , அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக உயர்வு: யார் யாருக்கு பொருந்தும்?



அரசு ஊழியர்கள், அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு வயது 59 -லிருந்து 60 ஆக உயர்த்தி முதல்வர் நேற்று அறிவித்திருந்த நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், பணியிலிருந்து ஒய்வு பெறும் வயது, 58-லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவின் பேரில், அரசாணை வெளியிடப்பட்டது. அரசுப் பணியாளர்களின் ஒய்வு பெறும் வயது தற்போது அமலில் உள்ள 59 வயது என்பது, 60 வயதாக உயர்த்தப்படும் என நேற்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி 110 வது விதியின் கீழ் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு தற்போது அரசாணையாக வெளியாகியுள்ளது. அந்த அரசாணையில் வெளியிடப்பட்ட உத்தரவு வருமாறு:

நேற்று (பிப்.25) சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் பணியிலிருந்து ஒய்வு பெறும் வயது, 58-லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவிடப்பட்டது, அரசாணை வெளியிடப்பட்டது. அரசுப் பணியாளர்களின் ஒய்வு பெறும் வயது தற்போது அமலில் உள்ள 59 வயது என்பது, 60 வயதாக உயர்த்தப்படும்.

இது அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்கள் அனைவருக்கும் பொருந்தும்.

இந்த உத்தரவு, தற்போது அரசுப் பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் இந்த ஆண்டு, அதாவது மே.31/2021 அன்று பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என அறிவித்தார்.

அதன்படி வரும் மே மாதம் முதல் இது அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பு ஆசிரியர் ஆசிரியர் பணியில் இல்லாத ஊழியர்கள், அரசு கல்வி நிறுவனங்கள், அரசு உதவிப்பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான துறைகள், பொதுத்துறையின் கீழ் வரும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், சொசைட்டிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொருந்தும்....

NEET - நுழைவுத் தேர்வுக் கட்டணம் உயர்வு: தேசியத் தேர்வுகள் வாரியம் அறிவிப்பு.


 


முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக் கட்டணம்  உயர்த்தப்பட்டுள்ளதாகத் தேசியத் தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது.

முதுகலை பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு அட்டவணையை என்பிஇ எனப்படும் தேசியத் தேர்வுகள் வாரியம்  அண்மையில் வெளியிட்டது. இப்படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்று (பிப்.23) தொடங்கியுள்ளது.


மாணவர்கள் nbe.edu.in என்ற இணையதளத்தில் இன்று மதியம் 3 மணி முதல் மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு ஏப்ரல் 18-ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் தேர்வு, கட்டணம், தேர்வு எழுதத் தேவையான தகுதி, ஹால்டிக்கெட், தேர்வு மையங்கள், கலந்தாய்வு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் என்பிஇ வெளியிட்டுள்ளது.


அதன்படி முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கான கட்டணம் ரூ. 3,750 இல் இருந்து, ஜிஎஸ்டி வரி ரூ.765 சேர்த்து, தற்போது ரூ.5,015 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோலப் பட்டியலின, பழங்குடியின மற்றும் மாற்றுத் திறனாளிப் பிரிவினருக்கான நீட் தேர்வுக் கட்டணம் முன்னர் ரூ.2,750 ஆக இருந்த நிலையில், 18 சதவீத ஜிஎஸ்டி வரி ரூ.585 சேர்த்து, தற்போது ரூ.3,835 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர்த்து இணையச் சேவையைப் பயன்படுத்துவதற்கான கட்டணமும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான விவரங்களுக்கு: https://www.digialm.com//per/g01/pub/852/EForms/image/ImageDocUpload/806/1111535453007404457970.pdf



Flash News: தமிழக தேர்தலில் புதிய மாற்றம்?. அடுத்த பரபரப்பு.!!!


தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதை எதிர்த்து இணையத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதை எதிர்த்து இணையத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி www.ban-evm. site என்ற இணையதளத்தை இதுவரை ஒரு லட்சம் பேர் கையெழுத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் முறைகேடு நடப்பதாக கூறி இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

போட்டித் தோவுகளுக்கு இலவச பயிற்சி:


போட்டித் தோவுக்கான இலவசப் பயிற்சி பெற விரும்பும் பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு, மாா்ச் 19-ஆம் தேதி இணைய வழியில் தோவு நடைபெறவுள்ளது.

தமிழகத்தில், மத்திய, மாநில அரசுப் பணி தோவுகளுக்கு இலவச பயிற்சி அளிப்பதற்கு சங்கா் ஐஏஎஸ் அகாதெமியுடன் சமூக நீதி அமைச்சகம் செய்துள்ள ஒப்பந்தத்தின்படி, யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தோவு எழுதும் 85 மாணவா்களுக்கு இலவச பயிற்சியும், மாத உதவித் தொகையும் வழங்கப்படும்.

இதில் பயன்பெற விரும்பும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் மாணவா்களுக்கு, மாா்ச் 19-ஆம் தேதி இணைய வழியில் தோவு நடைபெறுகிறது.

இதற்கான பதிவு, திங்கள்கிழமை (மாா்ச் 1) முதல் மாா்ச் 10-ஆம் தேதிக்குள் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு, 94441 66435 என்னும் எண்ணையோ, இணையதளத்தையோ அணுகலாம்.

சிலிண்டர் விலை முதல் பாஸ்டேக் வரை மார்ச் 1இல் இருந்து அமலாகும் 5 புதிய மாற்றங்கள்!


மார்ச் 1ஆம் தேதியிலிருந்து அதாவது நாளையிலிருந்து என்னென்ன விதிமுறைகள் அமல்படுத்தப்படவுள்ளன, என்னென்ன மாற்றங்கள் உருவாகவிருக்கின்றன என்பன குறித்தும் அதனால் பொதுமக்களின் வாழ்வில் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றியும் விரிவாகக் காணலாம்.

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இவ்விதி மிக மிக அவசியம்!

மார்ச் 1ஆம் தேதியிலிருந்து உங்களின் எஸ்பிஐ கணக்கு செயலில் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் கட்டாயம் கேஒய்சி (KYC) தகவல்களைப் பதிந்துகொள்ள வேண்டும். அதாவது வாடிக்கையாளர்கள் பெயர், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களைப் பதிவேற்ற வேண்டும். அப்படி செய்யாவிட்டால் உங்கள் கணக்கு செயல் இழந்துவிடும்.

2,000 ரூபாய் நோட்டுக்களை ஏடிஎம்மிலிருந்து எடுக்க முடியாது?

இந்தியன் வங்கி ஏடிஎம்களில் இனி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஏற்றப்படாது என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்குக் கட்டாயம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தான் வேண்டுமென்றால் வங்கிக்குச் சென்று பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.


இனி இலவச பாஸ்டேக் கிடைக்காது?

நாளையிலிருந்து அனைத்துச் சுங்கச்சாவடிகளிலும் 100 ரூபாய் கொடுத்தே பாஸ்டேக் பெற்றுக்கொள்ள வேண்டும். பாஸ்டேக் கட்டாயம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


சமையல் எரிவாயு விலை:

இது வழக்கம் போல உள்ள ஒரு மாற்றம் தான். மாதத்தின் முதல் நாள் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இருக்கும் என எண்ணெய் நிறுவனங்கள் கூறியிருப்பது அனைவரும் அறிந்தே ஒன்றே. இருப்பினும், இம்மாதம் மட்டுமே மூன்று முறை விலையேற்றமடைந்து 100 ரூபாய் அதிகமாகியிருக்கிறது. இப்போதைய விலை 810 ரூபாயாக இருக்கிறது.


பெட்ரோல், டீசல் விலை ஏற்றம்:

நாட்டில் பெரும் பேசுபொருளாக இருப்பது பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் தான். இதனால் சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கான மதிப்பு பொறுத்து தினமும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இருப்பினும், குளிர்கால முடிவில் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் வரும் என பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

New List of MBCs and DNCs - TN Govt. Gazette Released - Dated : 26.02.2021.

 New List of MBCs and DNCs - TN Govt. Gazette Released - Dated : 26.02.2021.

ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை


 

தேர்தல் பயிற்சி வகுப்பு நாட்களில் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை தேர்தல் ஆணையம்



ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் – 2021 முன்னிட்டு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்குகிறது அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த வட்டாட்சியர்கள் ஏற்பாடு செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



TRB- Special Teachers Notification-2020-2021



Applications are invited only through online mode from eligible candidates up to 05.00 P.M
on 25-04-2021 for the Direct Recruitment for the post of Special Teachers in School Education and
other departments for the year 2020-2021

TRB- Special Teachers Notification-2020-2021  In Pdf 


Special Teachers ( Craft Instructor(sewing), Art Master, Music Teacher, Physical Education Teacher)

Total -1598 + Backlog Vacancies

1. Important Dates :- A. Date of Notification : 26-02-2021
B. Commencement of submission of application through online mode : 31-03-2021
C. Last date for submission of application through online mode : 25-04-2021
D. Date of Written Examination : 27-08-2021


Breaking News : தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு



தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கை மே 2

என தலைமை தேர்தல் ஆணையம்

அரசு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யக் கூடாது - பதவி உயர்வும் வழங்கக்கூடாது-தேர்தல் ஆணையம் அறிவிப்பு


 தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன

தேர்தல் முடியும் வரை ஆளும் அரசு, புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது

அரசு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யக் கூடாது - பதவி உயர்வும் வழங்கக்கூடாது


அரசு விழாக்களில் அமைச்சர்கள் வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது

அரசு ஊழியர்களையோ, அரசு வாகனங்களையோ பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது

பொது மைதானங்களை ஹெலிபேடாக அனுமதி வழங்குவதில் கட்சி பேதம் பார்க்கக் கூடாது

12th Computer Applications - Reduced Syllabus Question Bank


12th Reduced Syllabus - New Study Materials

12th Reduced Syllabus - New Study Materials



2,900 கள உதவியாளர் பதவி ஏப்ரலில் உடல் தகுதி தேர்வு


 'கள உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, வரும் ஏப்ரலில், உடல் தகுதி தேர்வு நடத்தப்படும்' என, தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து, மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பு: வாரியத்தில், 2,900 கள உதவியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள், இணையதளம் வாயிலாக, இம்மாதம், 15 முதல் மார்ச் 16 வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.


விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, ஏப்ரலில் உடல்தகுதி தேர்வு நடத்தப்படும். உடல்தகுதி தேர்வு தேதி, விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கும், 'www.tangedco.gov.in' என்ற இணையதளத்திலும் பின்னர் தெரிவிக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

SHAALA SIDDHI முடிக்காதவர்கள் விரைவாக முடித்துக்கொள்ளவும் - Last Date: Feb.28


SHAALA SIDDHI

Academic year 2019-20 will be closed on Feb 28,2021

முடிக்காதவர்கள் விரைவாக முடித்துக்கொள்ளவும்

Academic year 2020-2021க்கான பதிவு மார்ச் 1,2021 முதல் தொடங்கலாம்



12th Chemistry - Public Exam 2021 - (Reduced Syllabus ) Model Question Paper


 Chemistry

  1. 12th Chemistry - Public Exam 2021 - (Reduced Syllabus ) Model Question Paper | Arthi TutionC - English Medium Download Here

 


 

 

10th New Reduced Syllabus - Study Material



 

 

 


 

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் எடுத்த நடவடிக்கைகள் என்ன?: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு:


 

மதுரை: மதுரையைச் சேர்ந்த வக்கீல் முகம்மது ரஷ்வி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் 2019ம் ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை சுமார் 16 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியானபோது, ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வெழுதிய பலர் முதல் நூறு இடங்களை பெற்றது தெரிய வந்தது. இதில், பெருமளவு மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர். 

சிபிஐ விசாரித்தால்தான் உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும். எனவே, குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்த  உண்மைகளை கண்டறியும் வகையில், இதுதொடர்பாக சிபிசிஐடி வசமுள்ள வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். வக்கீல் நீலமேகம் ஆஜராகி, ‘‘குரூப்-4 தேர்வு முறைகேட்டில் இதுவரை கடைநிலை ஊழியர்கள் மட்டுமே கைது ெசய்யப்பட்டுள்ளனர். 

வழக்கில் தொடர்புடைய உயர் அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. சிபிஐ விசாரித்தால்தான் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவர்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சிபிசிஐடி போலிசார் இதுவரை கைப்பற்றிய ஆவணங்கள், இதுவரை ேமற்கொள்ளப்பட்ட நடவடிக்கை உள்ளிட்ட விபரங்களை தமிழக தலைமை செயலர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தனர்.

3 நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!


பள்ளிக் கல்வி –ஆசிரியர்கள் பணியிடைப் பயிற்சி - பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) என்ற பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படவுள்ள 3 நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
பார்வையில் காணும் கடிதத்தில் , சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை , பெங்களூர் The National Institute of Mental Health and Neuro Sciences ( NIMHANS ) - ன் psychiatric social work துறையுடன் இணைந்து drug demand reduction program என்ற தலைப்பில் ஆளுமை திறனை வளர்பபதற்கான 3 நாட்கள் பயற்சியினை மேற்படி நிறுவனத்தின் பெங்களூர் அலுவலகத்தில் உத்தேசமாக பிப்ரவரி இறுதி வாரத்தில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , மேற்படி பயிற்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு பல்வேறு மாவட்டங்களிலிருந்து 200 ஆசிரியர்களின் பெயர்களை பரிந்துரை செய்யக் கோரப்பட்டுள்ளது . 

இப்பயிற்சியானது 40 நபர்கள் கொண்டு நடத்தப்படவுள்ளது . பயிற்சியில் கலந்து கொள்ளவுள்ள ஆசிரியர்களுக்கு அதிகபட்சமாக ரூ .1500 / - பயணக் கட்டணமாக வழங்கப்படும் எனவும் , பயிற்சியின் போது தங்குமிடமும் மற்றும் உணவும் மேற்படி நிறுவனத்தால் வழங்கப்படவுள்ளது. 

அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் மாவட்டத்திற்கு 6 ஆசிரியர்களை தேர்வு செய்து இணைப்பில் குறிப்பிட்ட படிவத்தில் விவரங்களை பூர்த்தி ( as soft copy in excel file ) செய்து 27.02.2021 க்குள் இவ்வலுவலக வி2 பிரிவு மின்னஞ்சல் v2sec.tndse@nic.in என்ற முகவரிக்கு அனுப்புமாறும் , முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட தொகுப்பறிக்கையினை விரைவு அஞ்சல் மூலம் அனுப்புமாறும் , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

மறு உத்தரவு வரும்வரை தொடக்கக்கல்வி இயக்ககத்தின் பதவி உயர்வு கலந்தாய்வு ரத்து - DEE உத்தரவு செயல்முறைகள்.


தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி ! மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 27.02.2021 மற்றும் 28.02.2021 ஆகிய நாட்களில் நடத்திட அறிவுரைகள் மற்றும் அட்டவணையுடன் வெளியிடப்பட்டு இருந்தது . 

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் , வட்டாரக் கல்வி அலுவலர்களின் பதவி உயர்வு , நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் , பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்கு இடைக்கால தடை ஆணை வழங்கப்பட்டுள்ளது . எனவே , நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பதவி உயர்வு , பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பதவி உயர்வு கலந்தாய்வு சார்பான அனைத்து நடவடிக்கைகளையும் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . 

இதே போன்று 26.02.2021 அன்று நடைபெறவிருந்த வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும் இடைக்கால தடையாணையின் காரணமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.


தேர்வு ரத்து அறிவிப்புக்கு தனியார் பள்ளிகள் எதிர்ப்பு


பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பால், தனியார் பள்ளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. நீதிமன்றத்தை நாட, முடிவு செய்துள்ளன.கொரோனா தாக்கம் குறைந்து, இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. அனைத்து நிகழ்ச்சிகளிலும், தேர்தல் பிரசாரங்களிலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கின்றனர். 

இந்நிலையில், பொதுத்தேர்வை ரத்து செய்திருப்பது, பெற்றோருக்கும், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அடிப்படை கல்வியான, 10ம் வகுப்பை கூட, 'ஆல் பாஸ்' என்று அறிவித்தால், உயர் கல்விக்கு செல்லும் போது, பாதிப்புகள் ஏற்படும். பத்தாம் வகுப்பில் இருந்து, பிளஸ் 1 மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில், மாணவர்களை சேர்க்கும் போது, எந்த மதிப்பெண் அடிப்படையில் சேர்ப்பது என்பதிலும் பிரச்னை ஏற்படும் என, பள்ளிகள் தரப்பில் கூறப்படுகிறது.

காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை கூட நடத்தாமல், மாணவர்களை எந்த வகையில் மதிப்பிட்டு, தேர்ச்சி வழங்குவது என்றும், கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து, தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச்செயலர் நந்தகுமார் கூறியதாவது:கடந்த ஆண்டு, 10ம் வகுப்பில் தேர்வே எழுதாமல், 'ஆல் பாஸ்' ஆன மாணவர்களுக்கு, இந்த ஆண்டு, பிளஸ் 1 வகுப்பிலும் பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு, பொது தேர்வு எப்படி இருக்கும் என்றே, தெரியாத நிலை உள்ளது.

அதனால், இந்த ஆண்டு பிளஸ் 1ல் தேர்ச்சி பெறும் மாணவர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதுவதில், கடும் சிரமப்படுவர். மேலும், மருத்துவ படிப்புக்கான, நீட் தேர்வு, ஜே.இ.இ., தேர்வு போன்றவற்றையும் எழுத தெரியாமல் தவிக்க நேரிடும். எனவே, பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பை, உடனே வாபஸ் பெற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.வழக்கு தொடர முடிவுஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவன தலைவர் அருணன் கூறுகையில், ''10ம் வகுப்பு மாணவர்கள், பிளஸ் 1 மற்றும் பாலிடெக்னிக் செல்ல, மதிப்பெண் தேவை. எனவே, பள்ளி அளவிலான தேர்வாவது நடத்தி, மதிப்பெண்ணை நிர்ணயிக்க வேண்டும்,'' என்றார்.'தேர்வு ரத்து முடிவை, அரசு மறுபரிசீலனை செய்யாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர முயற்சிக்கப்படும்' என, பள்ளி நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.

12ஆம் வகுப்பு தேர்ச்சியா? தமிழக அரசு வேலை.!!


தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Horticulture officer, Assistant Agriculture officer
காலி பணியிடங்கள்: 429
வயது: 18 முதல் 30 வரை.
சம்பளம்: ரூ.20,600 - ரூ.65,500
கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ, டிகிரி.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 4.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை சென்று பார்க்கவும்.

தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. 5000+ காலிப்பணியிடங்கள்..


தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் வேலையில்லாதவர்களுக்காக புதிய வேலைவாய்ப்பு முகாம் நடத்த தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து திட்டமிட்டு உள்ளது. தகவல் தொழில்நுட்பம், உட்பட பல்வேறு துறை சம்பத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பல இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள உள்ளதால் அதிக அளவில் பட்டதாரிகள் பணி வாய்ப்பு பெறும் வாய்ப்புள்ளது. இம்முகாமின் மூலமாக 50,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாம் ஆனது வரும் 28.02.2021 அன்று காலை 09.00 மணி முதல் மலை 04.00 மணி வரை தருமபுரி அரசு கலை கல்லூரியில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.

Official PDF Notification – https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/92102190001

ஆசிரியர் பணி வயது வரம்பு அரசாணையை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு


ஆசிரியர் பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 என நிர்ணயம் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு தொடர்பாக பள்ளி கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த சுமதி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் நிலை 1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு வரை ஆசிரியர் பணிக்கு 58 வயது வரை விண்ணப்பிக்க முடியும். ஆனால் தற்போதைய அறிவிப்பில் 2021 ஜூலையில் 40 வயதை கடந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் 40 வயதை கடந்தோர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

எனவே, தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் பணி நியமனத்துக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 என நிர்ணயம் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா அமர்வு விசாரித்தது. மனு தொடர்பாக தமிழக பள்ளி கல்வித் துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

சைக்கிள் பற்றாக்குறை விபரம் அனுப்ப உத்தரவு


பிளஸ் 1 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, விலையில்லா சைக்கிள், பற்றாக்குறை விபரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. 

கடந்த ஆண்டு, மாணவர் எண்ணிக்கையில், உத்தேச எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, ஒப்பந்தம் விடப்பட்டது. அதை எடுத்த நிறுவனம், அந்தந்த பள்ளிகளில், உதிரிபாகங்களை வினியோகித்து, விலையில்லா சைக்கிள்களை தயாரித்து வழங்குகின்றன. கொரோனாவால், அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்புகளில், மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 

இதனால், பல பள்ளிகளில், சைக்கிள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் சைக்கிள் வழங்க, உபரியாக உள்ள பள்ளிகளிலிருந்து சைக்கிள்களை பெற்று, பற்றாக்குறை பள்ளிகளுக்கு வழங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனால், சேலம் மாவட்டத்தில் உள்ள, அனைத்து பள்ளிகளும், விலையில்லா சைக்கிள் உபரி, பற்றாக்குறை விபரங்களை அனுப்ப, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்


 


தமிழகத்தில் நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. நடப்பு கல்வியாண்டில் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என தமிழக அரசு அறிவித்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Source: Dinakaran

Breaking News : அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு

Breaking News : அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு

Election class schedule for "Zonal officers. & ARO's. starting from March First week:

Election class schedule for "Zonal officers. & ARO's. starting from March First week:


The India Toy Fair 2021 " பிப்ரவரி மாதம் 27.02.2021 முதல் 02.03.2021 வரை இணையதள வழியாக கண்காட்சி - பள்ளிகள் கலந்து கொள்ள உத்தரவு.

SPD PROCEEDINGS:INDIA TOY FAIR-2021- 27.2.21முதல் 02.03.21 முடிய பெரும்பாலான மாணவர்கள் கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து- மாநில திட்ட இயக்குநர் செயல் முறைகள்.


மத்திய கல்வி அமைச்சகம் மூலம் " The India Toy Fair 2021 " பிப்ரவரி மாதம் 27.02.2021 முதல் 02.03.2021 வரை இணையதள வழியாக கண்காட்சி நடத்தப்பட உள்ளது. மேற்காணும் கண்காட்சி சார்ந்து பதிவு செய்தல் குறித்த விளக்க நடைமுறை மற்றும் அறிவுரைகள் அடங்கிய மத்திய கல்வி அமைச்சகக் கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இக்கண்காட்சில் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகள் / தனியார் கல்வி நிறுவனங்களும் கலந்து கொள்ளுதல் வேண்டும். மேற்படி கண்காட்சியினை பெரும்பான்மையான மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டு பயன்பெற வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவுரை வழங்கியுள்ளன . எனவே , இக்கண்காட்சியில் பங்கேற்க உரிய பதிவுகள் செய்து பயன்பெறும் வகையில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இக்கண்காட்சி நடைபெறும் மேற்குறிப்பிட்ட தேதிகளில் , பங்கேற்பாளர்கள் பங்குபெறுவதை கண்காணிக்கவும் மற்றும் அதன் விவரங்களை அனுப்பப்படும் Google Sheet ல் பதிவுகள் மேற்கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது.

மாா்ச் 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்


 

 நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கும் 45 வயதைக் கடந்த இணைநோய்கள் உள்ளோருக்கும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் காணொலி மூலம் மத்திய அமைச்சரவைக் கூட்டம்


புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல்-ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:


இரண்டாம் கட்ட...: இரண்டாவது கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள், மாா்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. அதில், 60 வயதைக் கடந்தவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் நாட்டிலுள்ள 10 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிகிறது.


இணைநோய் உள்ளவா்களுக்கும்...: மேலும், 45 வயதைக் கடந்த இணைநோய் உள்ளவா்களுக்கும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள், நாட்டிலுள்ள 10,000 அரசு மருத்துவமனைகளிலும், சுமாா் 20,000 தனியாா் மருத்துவமனைகளிலும் நடைபெறவுள்ளன.


அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி இலவசமாகச் செலுத்தப்படும். தடுப்பூசி செலுத்துவதற்கான செலவை மத்திய அரசே ஏற்கும். தேவையான தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும்.


தனியாா் மருத்துவமனையில் கட்டணம் எவ்வளவு?: தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோா், அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும். இது தொடா்பாக கரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள், தனியாா் மருத்துவமனைகளுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.


இரு வகையான தடுப்பூசிகள்: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட், கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளும் தரமானவையாக உள்ளன. நாடு முழுவதும் கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 1,07,67,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவா்களில் 14 லட்சம் பேருக்கு இரண்டாவது தவணையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


இந்தியத் தடுப்பூசித் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் ஜாவடேகா்.


அமைச்சா்களுக்கு தடுப்பூசி: மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் கூறுகையில், ‘‘மத்திய அமைச்சா்களில் பெரும்பாலானோா் கரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ள விரும்பவில்லை. உரிய கட்டணத்தை அளித்து, கரோனா தடுப்பூசியை அவா்கள் செலுத்திக் கொள்வா்.


பல நாடுகளில் பிரதமா்களும் அமைச்சா்களும் முதலில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். ஆனால், இந்தியாவில் சுகாதாரப் பணியாளா்களுக்கு முதலில் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்று விரும்பினோம். அதன் காரணமாகவே அவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது’’ என்றாா்.


உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகை: மடிக்கணினி, கை கணினி (டேப்), தனிக் கணினி உள்ளிட்டவை உள்நாட்டில் தயாரிக்கப்படுவதை அதிகப்படுத்தும் நோக்கில் உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


இது தொடா்பாக மத்திய அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் கூறுகையில், ‘‘தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்தும் நோக்கில் ரூ.7,350 கோடி ஊக்கத்தொகை வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படவுள்ள இந்த ஊக்கத்தொகையின் மூலமாக ரூ.3.26 லட்சம் கோடி மதிப்பிலான சாதனங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படும். அவற்றில் ரூ.2.45 லட்சம் கோடி மதிப்பிலான சாதனங்கள் ஏற்றுமதி செய்யப்படும்.


ஊக்கத்தொகை வழங்கப்படுவதன் வாயிலாக தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் உற்பத்தித் துறையில் புதிதாக 1.80 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்’’ என்றாா்.


மருந்து உற்பத்தித் துறைக்கு...: மருந்துப் பொருள்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அத்துறைக்கு உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


இது தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘மருந்துப் பொருள்கள் உற்பத்தித் துறைக்கு ரூ.15,000 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. இதன் வாயிலாக வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதோடு மக்களுக்கு மலிவான விலையில் தரமான மருந்துகள் கிடைக்கும்.


2022-23 முதல் 2027-28 வரை ரூ.2,94,000 கோடி மதிப்பிலான மருந்துப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு, ரூ.1,96,000 கோடி மதிப்பிலான மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


புதுச்சேரியில் குடியரசுத் தலைவா் ஆட்சி


புதுச்சேரியில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசின் அமைச்சா்கள் அண்மையில் ராஜிநாமா செய்தனா். அமைச்சரவையின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்றுக் கொண்டாா்.


இத்தகைய சூழலில், புதுச்சேரியில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.


புதுச்சேரியில் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராததால், குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்துமாறு துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரைத்திருந்தாா். அந்தப் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்தாா்.


குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்தபிறகு, புதுச்சேரி சட்டப் பேரவை கலைக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

TNPSC - DEPARTMENTAL EXAMINATIONS QUESTION 2021- ADMINISTRATIVE TEST PAPER 1 - PDF


FLASH NEWS: ELEMENTARY PROMOTION DATE ANNOUNCED தமிழ்நாடு தொடக்க கல்வியில் பணி புரியும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ,பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு தேதி அறிவிப்பு


FLASH NEWS: ELEMENTARY PROMOTION DATE ANNOUNCED தமிழ்நாடு தொடக்க கல்வியில் பணி புரியும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு தேதி அறிவிப்பு Click Here

மாற்றி அமைக்க பட்ட DEO list



MIDDLE HM TO BEO PANEL LIST | நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியில் இருந்து வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு அளிக்கத் தகுதி வாய்ந்த தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு!!!


  • நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியில் இருந்து  வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு அளிக்கத் தகுதி வாய்ந்த தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு!!! Click Here

BT to PG Promotion : Botany & Zoology Name List Released - DSE Proceedings DIRECTOR PROCEEDINGS :

BT to PG Promotion : Botany & Zoology Name List Released - DSE Proceedings DIRECTOR PROCEEDINGS :

PG NEET Exam 2021 Notification

PG NEET Exam 2021 Notification

 

முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஏப் . 18 ம் தேதி நடைபெறுகிறது இன்று முதல் மார்ச் 15 வரை ஆன்லைன் மூலம் முதுகலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.



அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்!


 7.5 லட்சத்திலிருந்து ரூபாய் 10 லட்சமாக உயர்வு...



Recent Posts

Total Pageviews

Blog Archive