பொதுத்தேர்வுகள்:ிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் அட்டவணையை இந்த மாத தொடக்கத்தில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வுகள் மே 4 ம் தேதி முதல் ஜூன் 10ம் தேதி வரை நடக்க உள்ளது. மேலும், 10 மற்றும் 12ம் வகுப்புக்கான செயல்முறை மற்றும் உள் மதிப்பீடு தேர்வுகளை மார்ச் 1ம் தேதி முதல் ஜூன் 11ம் தேதிக்குள் அந்தந்த பள்ளிகளே நடத்தி கொள்ள வேண்டும் என்று தேர்வு வாரியம் அறிவித்தது.ெயல்முறை தேர்வுக்கான வழிமுறைகள்:
இந்நிலையில் செயல்முறை தேர்வுகளுக்கான வழிகாட்டு நடைமுறைகளை மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்சி இணையதளத்தில் செயல்முறை தேர்வுக்கான மதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை தேர்வு வாரியம் விரிவாக வழங்கியுள்ளது. மதிப்பீடு முடிந்தவுடன் பள்ளியின் அதிகாரிகள் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளும் செயல்முறை தேர்வை கண்காணிக்க தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட வேறு பள்ளிகளின் தேர்வாளரை நியமிக்க வேண்டும்.
தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட படி தேர்வுகள் நடைபெறாவிட்டால் வாரியம் தேர்வை ரத்து செய்துவிடும். குறிப்பிட்ட பாடத்தில் மாணவர்களின் உள்மதிப்பீடு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் செயல்முறை தேர்வுக்கான மதிப்பெண் வழங்கப்படும் என்று சிபிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் கண்டிப்பாக கோவிட் -19 நோய் தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். உடல்நிலை சரியில்லாத மாணவர்கள் முன்னராகவே அறிவித்து விட வேண்டும். அவர்களுக்கு தனியாக தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும், சிபிஎஸ்சி அறிவித்துள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றாத பள்ளிகளுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.