10,11 ம் வகுப்பு தேர்வு எப்போது? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, February 18, 2021

10,11 ம் வகுப்பு தேர்வு எப்போது?



‘பத்து மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, ஜூனில் பொதுத் தேர்வு நடத்தப்படலாம்’ என, பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மே 3 முதல், 21 வரை, பிளஸ் 2 தேர்வு நடக்கிறது. அதனால், 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு எப்போது நடத்தப்படும் என, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


பிளஸ் 2வை பொறுத்தவரை பலர், ‘நீட்’ மற்றும் ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளை எழுத உள்ளதால், அவர்களுக்கு, மே மாதத்துக்குள் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.அதேநேரம், பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, ஜூனில் தேர்வு நடத்தப்படலாம் என, தெரிகிறது. இந்த ஆண்டு தாமதமாக பாடங்கள் நடத்தியுள்ளதால், கல்வி ஆண்டை, ஜூன் வரை நீட்டிக்க வாய்ப்பு உள்ளத

எனவே, பிளஸ் 1 பொதுத் தேர்வு ஜூனில் நடத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி முடிவாகி விட்டால், மே இறுதி வாரத்தில் தேர்வு துவங்கப்பட்டு, ஜூன் இரண்டாம் வாரத்தில் முடிக்கப்படலாம்

Post Top Ad