இந்த நிலையில் 2021 சென்சஸ் பணிகளுக்காக ரூ.8,754 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 108 முகாம்களில் 58,843 இலங்கை தமிழ் அகதிகள் உள்ளனர் என்றும், முகாம்களுக்கு வெளியே 34,134 இலங்கை தமிழ் அகதிகள் வசித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஒடிசாவில் உள்ள முகாமில் 54 இலங்கை தமிழ் அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் விதிகளை மீறியதாக இதுவரை 20,600 தொண்டு நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.