தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் காத்துள்ள நிலையில் தேர்தல் தேதி குறித்த முக்கிய அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் எத்தனை சுற்றுகளாக தேர்தலை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை தலைமை தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளின் கருத்துகளை கேட்டு ஆலோசித்து வருகிறது..
இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 'தமிழகத்தில் தேர்தல் தொடங்குவது குறித்து டெல்லி செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்படும், தமிழகத்தில் மே 24ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்'என கூறியுள்ளார்.