இணைப்பில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சார்பான கீழ்க்காணும் விவரங்களை உடன் இவ்வியக்ககம் அனுப்புமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
1. சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் நிலுவையில் உள்ளதா ?
2. சார்ந்த தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் தொடரப்பட்டு , இறுதியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா ?
3. சார்ந்த ஆசிரியர்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் நடவடிக்கைகள் ஏதும் நிலுவையில் உள்ளதா ?
4. சார்ந்த தலைமை ஆசிரியர்கள் யாரேனும் விருப்ப ஓய்வில் சென்றுள்ளனரா என்ற விவரம்
5. சார்ந்த தலைமை ஆசிரியர்கள் விருப்ப மாறுதலில் / நிர்வாக மாறுதலில் மாற்றம் செய்யப்பட்டிருப்பின் தற்போது பணிபுரியும் பள்ளி