பிளஸ்-2 தேர்வில் ஒரு அறையில் 25 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியில் அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தலை பொருத்தவரை அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு பிறகு தேர்தல் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும். ஆசிரியர்கள் மாணவர்களை தங்கள் பிள்ளைகள் போல் நினைத்து கல்வி கற்று தருகின்றனர்.
பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது.
தமிழகத்தில் மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைபாடு இல்லை. பிளஸ்-2 தேர்வை எத்தனை பேர் எழுதுகிறார்கள் என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும். பிளஸ்-2 தேர்வில் ஒரு அறையில் 25 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்பு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. பள்ளிக்கு வராத பிளஸ்-2 மாணவர்கள் பெற்றோர் மற்றும் மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு எழுதலாம். இப்போது அரசு பள்ளிகளில் 98 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். இடைநிற்றல் என்பதே தமிழகத்தில் இல்லை. மாணவர்கள் சேர்க்கை கூடுதலாக உள்ளது