தமிழ் நாடு ஆசிரி யர் சங்கத்தின் ஒருங் கிணைந்த வேலூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது . தொடர்ந்து சங்க மாநில செயலாளர் வி.சரவணன் நிருபர்களி டம் கூறியதாவது : அரசு நடுநிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக உள்ள 57 வயதை கடந்த வர்களுக்கு பிஇஓ பதவி உயர்வு வழங்க வேண்டும்.
வரும் 27 , 28 ஆகிய தேதிக ளில் தொடக்கக்கல்வித் துறையில் நடைபெறும் பதவி உயர்வுக்கான கலந் தாய்வை பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு பின்னரே நடத்த வேண்டும் . பட்டதாரி ஆசிரியர் களுக்கு பதவி உயர்வு வழங்கிய பின்னரே தாடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும் . கடந்த 2019 ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ச்சிபெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துள்ள 2,144 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடன டியாக பணி நியமனம் .
கர்ப்பிணிகள் , நோயாளிகள் , மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு தேர் தல் பணிகளில் இருந்து விலக்கு அளித்துள்ளது போல் , மே மாதம் 3 ம் தேதி பிளஸ் 2 தேர்வு நடை பெறும் நிலையில் , பிளஸ் 2 பாட ஆசிரியர்களுக் கும் தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் . 9 முதல் 12 ம் வகுப்பு வரை சனிக்கிழமைகளில் மாணவர் குறைந்துள்ள தால் , அன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண் டும் . இவ்வாறு அவர் கூறி னார் .