ஆதி திராவிடா் நல விடுதிகளில் மாணவா் சோ்க்கை: விண்ணப்பிக்க பிப்.18 கடைசி
கொரோனா எதிரொலி:கொரோனா நோய்த்தொற்று காரணமாக கர்நாடகா மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த பள்ளிகள் அனைத்தும் ஜனவரி 1ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகளை தொடங்கியது. மற்ற வகுப்புகளுக்கு பாடங்கள் தொடர்ந்து ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படுகின்றது. அடுத்த கட்டமாக 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. கொரோனா நிலவரம்:மாநில சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி, கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 9,45,638 பேர் தற்போது வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். கடந்த திங்கள் கிழமையின் நிலவரப்படி, அன்று மட்டும் 386 புதிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மற்ற வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பது குறித்து மாநில அரசு ஆலோசித்து வந்தது.
தமிழகத்தில் விரைவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
இந்நிலையில் மாநில கல்வித்துறை அமைச்சர் சூர்யநாராயண சுரேஷ்குமார் அவர்கள், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 22ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். பெங்களூரு மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 8ம் வகுப்புக்கு மட்டுமே வகுப்புகள் தொடங்கப்படும். கேரள பகுதியில் இருந்து வரும் மாணவர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழை பள்ளிக்கு கொண்டு வர வேண்டும். 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அரசு இன்னும் முடிவு செய்யவில்லை” என்று கூறினார்.