7th Pay Commission: குடும்ப ஓய்வூதிய வரம்பு உயர்த்தப்பட்டது: மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள் : - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, February 13, 2021

7th Pay Commission: குடும்ப ஓய்வூதிய வரம்பு உயர்த்தப்பட்டது: மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள் :


7th Pay Commission Latest News:அகவிலைப்படி (Dearness Allowance) அறிவிப்பில் தாமதம் குறித்து கவலைப்படும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, நரேந்திர மோடி அரசு ஒரு நல்ல செய்தியை அளித்துள்ளது. குடும்ப ஓய்வூதியம் குறித்த ஒரு மிகப்பெரிய சீர்திருத்தமாக, குடும்ப ஓய்வூதிய வசதியின் மேல் உச்சவரம்பு மாதத்திற்கு 45,000 ரூபாயிலிருந்து 1,25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

இந்த நடவடிக்கை இயற்கை எய்திய மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) குடும்ப உறுப்பினர்களுக்கு நல்ல முறையில் வாழ்வதற்கான வழியை அளிப்பதோடு அவர்களுக்கு போதுமான நிதி பாதுகாப்பையும் வழங்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஒரு குழந்தையின் பெற்றோர் இறந்துவிட்டால், அக்குழந்தை இரண்டு இரண்டு குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியுடையவராக இருந்தால், அக்குழந்தைக்கு கிடைக்கக்கூடிய தொகை குறித்தும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை (DoPPW) தெளிவுபடுத்தியுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் மேலும் தெரிவித்தார். இரு குடும்ப ஓய்வூதியங்களின் தொகையும் இப்போது மாதத்திற்கு ரூ .1,25,000 ஆக இருக்கும் என்றும் இது முந்தைய வரம்பை விட இரண்டரை மடங்கு அதிகமாகும் என்றும் டாக்டர் சிங் கூறினார்.

CCS ஓய்வூதிய விதி

மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிகள் 1972 இன் விதி 54 இன் துணை விதி (11) ஐ மேற்கோள் காட்டி, மனைவி மற்றும் கணவர் இருவரும் அரசு ஊழியர்களாக இருந்து, அந்த விதியின் விதிகளால் நிர்வகிக்கப்படும் நிலையில், அவர்கள் இறந்தால், அவர்களது குழந்தைக்கு தாய் தந்தை என இருவரது மரணத்திற்காக இரண்டு குடும்ப ஓய்வூதியங்களைப் (Pension) பெற தகுதி உண்டு.

6 வது மத்திய ஊதியக்குழு விதிகளிலிருந்து குறிப்பு கிடைத்தது

இதுபோன்ற வழக்குகளில் இரு குடும்ப ஓய்வூதியங்களின் மொத்த தொகை மாதத்திற்கு ரூ .45,000 மற்றும் மாதத்திற்கு ரூ .27,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று முந்தைய அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை முறையே 50 சதவீதம் மற்றும் 30 சதவீதம் என்ற விகிதத்தில் தீர்மானிக்கப்படுகின்றன. 6 வது சிபிசி பரிந்துரைகளின்படி மிக அதிக தொகை அளவான ரூ .90,000 இதற்கு அடிப்படையாக எடுக்கப்பட்டது.

7 வது ஊதியக்குழு என்ன சொல்கிறது

7 வது ஊதியக்குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளை அமல்படுத்திய பின்னர் அதிகபட்ச ஊதியம் மாதத்திற்கு ரூ .2,50,000 ஆக மாற்றப்பட்டிருப்பதால், CCS (ஓய்வூதிய) விதிகளின் விதி 54 (11) இல் பரிந்துரைக்கப்பட்ட தொகையும் மாதத்திற்கு, 2,50,000 ரூபாயில் 50 சதவீதம் ரூ .1,25,000 ஆகவும் அதில் 30 சதவீதம் ரூ .75,000 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.

மோடி அரசு இதை தெளிவுபடுத்தியுள்ளது

பல்வேறு அமைச்சகம் மற்றும் துறையிலிருந்து பெறப்பட்ட குறிப்புகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள விதிப்படி, பெற்றோர்கள் அரசு ஊழியர்களாக இருந்தால், அவர்களில் ஒருவர் சேவையில் இருக்கும்போது அல்லது ஓய்வுக்குப் பிறகு இறந்துவிட்டால், இறந்தவரின் வாழ்க்கைத் துணைக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும். அவர் இறந்த நிலையில், அவர்களது குழந்தைக்கு இரண்டு குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும். பிற தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு உட்பட்டு இந்த இரண்டு குடும்ப ஓய்வூதியங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Post Top Ad