9 முதல் பிளஸ் 2 வரை ஷிப்ட் முறையில் வகுப்பு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, February 4, 2021

9 முதல் பிளஸ் 2 வரை ஷிப்ட் முறையில் வகுப்பு.



ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில், சமூக இடைவெளியை பின்பற்ற, இடம் பற்றாக்குறை ஏற்பட்டால், பள்ளிகள், 'ஷிப்ட்' முறையில் இயங்கலாம் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.


இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:அரசின் உத்தரவுப்படி, 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகள், வரும், 8ம் தேதி துவங்கலாம். வகுப்பறையில் கூடுதல் இடவசதி இருந்தால், கூடுதல் இருக்கை அமைத்து, சமூக இடைவெளிப்படி மாணவர்களை அமர வைக்கலாம். 


போதிய வகுப்பறைகளும், ஆசிரியர்களும் இருப்பின், திங்கள் முதல் சனிக்கிழமை வரை, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, முழு வேளையாக பள்ளிகள் இயங்கலாம்.சமூக இடைவெளியை பின்பற்றும் போது, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதலாக சில வகுப்பறைகள் மட்டும் தேவைப்படும் போது, ஆய்வகம், நுாலகம், கூட்ட அரங்கம் போன்றவைகளை பயன்படுத்தி, முழு நேரமாக செயல்படலாம்.


கூடுதல் ஆசிரியர்கள் தேவை இருக்குமானால், மாணவர்களை பெரிய வகுப்பறை, கூட்ட அரங்கம் போன்ற இடங்களில் அமர வைத்து, வகுப்புகளை நடத்தலாம். சில பள்ளிகளில் இடம் பற்றாக்குறை ஏற்பட்டால், பிரிவு வாரியாக, ஒரு நாள் விட்டு, ஒரு நாள் செயல்படலாம். 


சில பிரிவுகள், காலை, மாலை என, இரண்டு ஷிப்டுகளாக செயல்படலாம். இதற்கான முடிவு களை, தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Post Top Ad