தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கேற்ப 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிச்செட்டிப்பாளையம் அருகே சிறுவலூரில் 43 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டுமானங்களுக்கான கட்டுமானப் பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், 6 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு டேப் (TAB) வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க இதுவரை ஆய்வு நடக்கவில்லை என தெரிவித்த அவர், இதுகுறித்து முதலமைச்சரிடம் கலந்து முடிவெடுக்கப்படும் என்றார். தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கேற்ப 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்து அரசிடம் இருந்து கடிதம் கிடைத்த பிறகு தான் முடிவு செய்யப்படும் எனவும் கூறினார்.