ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை எஸ்பிஐ நிறுவனம் அறிவித்துள்ளது. அதுகுறித்து இதில் தெரிந்து கொள்வோம். - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, February 8, 2021

ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை எஸ்பிஐ நிறுவனம் அறிவித்துள்ளது. அதுகுறித்து இதில் தெரிந்து கொள்வோம்.



ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை எஸ்பிஐ நிறுவனம் அறிவித்துள்ளது. அதுகுறித்து இதில் தெரிந்து கொள்வோம்.

அவசர தேவைக்காக ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கொண்டு வந்துள்ளது. நாம் சில நேரங்களில் அவசர அவசரமாக வெளியில் கிளம்பும் போது பர்ஸை எடுக்காமல் விட்டு விடுவோம். திடீரென்று அப்போது பணத்தேவை ஏற்படும் அந்த நேரத்தில் ஏடிஎம் கார்டு இருக்காது, அப்ப என்ன செய்வீர்கள். மீண்டும் வீட்டிற்கு வந்து ஏடிஎம் கார்டு எடுத்து வர மிகவும் நேரமாகும். தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பிரபலமாக உள்ள காலகட்டத்தில் ரொக்க பணத்துக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.இதுபோன்ற இக்கட்டான சூழலில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு எஸ்பிஐ யோனோ ஆப் என்பதை பயன்படுத்த வேண்டும். இந்த ஆப்பை ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்து கொண்டால் அதிகபட்சம் 20 ஆயிரம் வரை பணம் எடுக்க வேண்டும் முடியும்.

எப்படி செய்வது:

இதற்கு முதலில் யோனா ஆப் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.

YONO app பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும். லாகின் செய்து yono cash என்ற வசதியைத் தேர்ந்தெடுக்கவும்.

பிறகு ATM செக்சனை கிளிக் செய்தால் உங்களது வங்கிக் கணக்கில் உள்ள பேலன்ஸைப் பார்த்து கொள்ளமுடியும்.

இப்போது பணம் எவ்வளவு எடுக்க வேண்டும் என்று பூர்த்தி செய்து Next என்பதை கிளிக் செய்யவும். ஆறு இலக்க vago transaction நம்பரைப் பதிவிட்டு Next கொடுக்கவும்.

vago transaction number உங்களது மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும். இது அடுத்த 4 மணி நேரங்களுக்கு ஆக்டிவாக இருக்கும்.

இப்போது அருகிலுள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்துக்குச் சென்று ஏடிஎம் ஸ்கிரீனில் YONO cash வசதியைத் தேர்ந்தெடுக்கவும்.

yono cash transaction number மற்றும் yono cash PIN நம்பரைப் பதிவிட்டால் தேவையான பணம் வரும்.

Post Top Ad