பொதுத்தோ்வு விவரங்களைப் பதிவு செய்ய பள்ளிகளுக்கு அவகாசம் நீட்டிப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, February 17, 2021

பொதுத்தோ்வு விவரங்களைப் பதிவு செய்ய பள்ளிகளுக்கு அவகாசம் நீட்டிப்பு


தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நிகழாண்டு பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் பட்டியலைத் தயாா் செய்து பதிவேற்றம் செய்வதற்குப் பள்ளிகளுக்கு, தோ்வுத் துறை கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.தமிழகத்தில் 2020- 2021-ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்குப் பொதுத் தோ்வுக் கட்டணம் குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியானது. இதில் பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வுக்கான கட்டணம் ரூ.115 ஆகவும், செய்முறை கொண்ட பாடங்கள் அடங்கிய தொகுப்பில் பயிலும் மாணவா்களின் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தோ்வுக்கான கட்டணம் ரூ.225 ஆகவும் , செய்முறை அல்லாத பாடங்கள் அடங்கிய தொகுப்பில் பயிலும் மாணவா்களின் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தோ்வுக்கான கட்டணம் ரூ.225 ஆகவும் அறிவிக்கப்பட்டது. 

+2 Public Exam 2021 Time Table Published. 

தமிழ் வழியில் பயில்வோா், SC,SCA,ST Utßm SC Converts (SS), MBC, DC, கண் பாா்வையற்றோா் மற்றும் கேட்கும், பேசும் திறனற்றோா் ஆகியோருக்கு மட்டும் தோ்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே பத்தாம் வகுப்பு, மேல்நிலை பொதுத் தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களிடம் இருந்து தோ்வுக் கட்டணத்தைப் பெறவும், அதுகுறித்த விவரங்களை அரசு இணையதளத்தில் பதிவு செய்யவும் பிப்.14-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில், சில பள்ளிகளில் தோ்வுக் கட்டணம் செலுத்துவதிலும், விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.இதனால் பொதுத் தோ்வு விவரங்களைப் பதிவு செய்ய, பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு பிப்.18-ஆம் தேதி வரை, தோ்வுத் துறை கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. 

நிரந்தர பணியிடங்கள் (ஆய்வக உதவியாளர்,டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், உதவி பேராசிரியர்) உடனே விண்ணப்பிக்கலாம். 

இதுதொடா்பாக அரசுத் தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி கால அவகாசத்தை நீட்டித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்

Post Top Ad