இந்திய அரசின் மனிதவளத் துறையின்கீழ் செயல்படும் தேசிய தேர்வாணையத்தால் நடத்தப்படும் UGC-NET EXAM-2021 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து மார்ச் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு: UGC-NET EXAM-2021 தகுதி:கலை, அறிவியல், மேலாண்மையியல், பொருளாதாரம், மானுடவியல் போன்ற துறையைச் சேர்ந்த ஏதாவதொரு பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளை இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும். இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் தேதியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC, ST, OBC, Non-Creamy Layer பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் NET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: NET தேர்வு எழுதி கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரிய விரும்புபவர்களுக்கு உச்ச வயதுவரம்பில்லை. இளநிலை ஆராய்ச்சியாளராக விரும்புபவர்கள்(JRF) 31 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, ST,OBC, PWD, Transgender பிரிவினருக்கு 5 ஆண்டு சலுகை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு முறை: NET தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. முதல் தாள் 100 மதிப்பெண்கள் கொண்டது. விண்ணப்பத்தாரரின் கற்பிக்கும் திறனை சோதிக்கும் வகையில் 50 வினாக்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு 1 மணி நேரம் கொண்டதாக இருக்கும். இரண்டாம் தாள் 200 மதிப்பெண்கள் கொண்டது. 100 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். தேர்வு 2 மணி நேரம் கொண்டதாக இருக்கும். தேர்வு கணினி வழி ஆன்லைன் தேர்வாக இருக்கும்.
தமிழகத்தில் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குசி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், விருதுநகர்
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.1000, OBC,EWS பிரிவினர் ரூ.500, SC,ST,PWD,Transgender பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை:www.ntanet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.03.2021
மேலும் விவரங்கள் அறிய www.ntanet.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.