சென்னை : தமிழக சட்டசபையில் இன்று(பிப்.,2) கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார். அவரது உரையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தாண்டில் முதல் சட்டசபை கூட்டம் இன்று துவங்குகிறது. காலை 11:00 மணிக்கு சட்டசபையில் தமிழக கவர்னர் உரையாற்றுகிறார்.தமிழக சட்டசபைக்கு இரு மாதங்களில் தேர்தல் வர உள்ளதால் கவர்னர்உரையில் மக்களை கவரும் வகையில் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று கவர்னர் உரை முடிந்ததும் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் கூடி சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்யும்.