தமிழகம் முழுவதிலும் அரசு ஊழியர்களின் ஈட்டிய சரண் விடுப்பு ரத்து செய்து விடுப்பு கணக்கில் சேர்க்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் நடைமுறையில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதாவது ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாக பெறும் நடவடிக்கை 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் ஈட்டிய சரன் விடுப்பு தொடர்பாக ஒப்புதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தால், அதனை ரத்து செய்துவிட்டு அந்த விடுப்புகளை அரசு ஊழியர்களின் விடுப்பு கணக்கில் சேர்க்கலாம் என அரசு அறிவித்துள்ளது.