'
''தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மாவட்ட வாரியாக பெண்களுக்கு இலவசமாக கல்வி தொழில் பயிற்சி தரும் வகையில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி உருவாக்கப்படும்'' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை கொளத்துார் தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது:பெண்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற நோக்கத்திற்கு செயல் வடிவம் கொடுக்கத் தான் 'அனிதா அச்சீவர்ஸ் அகாடமி'யை கொளத்துார் தொகுதியில் 2019ல் துவக்கினேன். கணினி பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் பயிற்சி பெற்ற பலர் பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.வேலை கிடைத்தது என்பதை விட சம்பளம் கிடைக்கிறது என்பதை விட அவர்களுக்கு தன்னம்பிக்கை வந்திருப்பது தான் முக்கியம். கணினி வகுப்போடு தையல் பயிற்சி இளைஞர்களுக்கு தனி பயிற்சி மையம் என விரிவடைந்து அனிதா அச்சீவர்ஸ் அகடமி இன்றைக்கு மினி கல்லுாரியை போல வளர்ந்து வந்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.
தமிழகம் முழுதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அனிதா அச்சீவர்ஸ் அகடமி தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்படும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.