தமிழகத்தில் வரும் 8ஆம் தேதி 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஒன்பது மாதங்களாக பள்ளிகள் மூடியிருந்த நிலையில் கடந்த மாதம் 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் விருப்பம் இருக்கும் மாணவர்கள் மட்டும் வரலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 8 ஆம் தேதி வகுப்புகள் தொடங்க இருக்கிறது. விருப்பம் இருக்கும் மாணவர்கள் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளி மற்றும் விடுதிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
காலை, பிற்பகல் என வகுப்புகளை பிரித்து நடத்தவும், மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் வகுப்புகளை ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது ஷிப்ட் முறையில் என்று சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.