பிளஸ் 1 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, விலையில்லா சைக்கிள், பற்றாக்குறை விபரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு, மாணவர் எண்ணிக்கையில், உத்தேச எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, ஒப்பந்தம் விடப்பட்டது. அதை எடுத்த நிறுவனம், அந்தந்த பள்ளிகளில், உதிரிபாகங்களை வினியோகித்து, விலையில்லா சைக்கிள்களை தயாரித்து வழங்குகின்றன. கொரோனாவால், அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்புகளில், மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இதனால், பல பள்ளிகளில், சைக்கிள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் சைக்கிள் வழங்க, உபரியாக உள்ள பள்ளிகளிலிருந்து சைக்கிள்களை பெற்று, பற்றாக்குறை பள்ளிகளுக்கு வழங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், சேலம் மாவட்டத்தில் உள்ள, அனைத்து பள்ளிகளும், விலையில்லா சைக்கிள் உபரி, பற்றாக்குறை விபரங்களை அனுப்ப, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.