'ஜாக்டோ - -ஜியோ' அமைப்பின் 72 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நிறைவடைந்தது.
ஜாக்டோ - -ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது.இதன்படி 8ம் தேதி முதல் 72 மணி நேர உண்ணாவிரத போராட்டம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே
நடந்தது. ஜாக்டோ - ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.
அரசு தரப்பு பேச்சு நடத்த முன் வரவில்லை. எனவே வரும் 13ம் தேதி திருச்சியில் உயர்மட்ட குழு கூட்டம் நடத்தி அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என
ஜாக்டோ - ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.