எஸ்.ஐ., தேர்வு: தேதி அறிவிப்பு


போலீஸ் எஸ்.ஐ., பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு, வரும், 23ம் தேதி முதல், சென்னையில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. தமிழக காவல் துறையில் பணியாற்ற, 2019ல், எஸ்.ஐ., தேர்வு நடைபெற்றது. எழுத்து தேர்வு, உடற்தகுதி, ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் முடிவடைந்து, 969 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு அறிவிக்கப்பட்டு, பின் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், எஸ்.ஐ., நேர்முக தேர்வு, நாளை மறுநாள் முதல், சென்னை, எழும்பூரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., வளாகத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பழைய தேதியை பின்பற்றி, புதிய தேதியில்தேர்வர்கள், நேர்முக தேர்வில் பங்கேற்கலாம். அதன் விபரம்:பழைய தேதி புதிய தேதி2020 
டிச., 24 பிப்., 23 
2020 டிச., 28 பிப்., 24 
2020 டிச., 29 பிப்., 25 
2020 டிச., 30 பிப்., 26 
2021 ஜன., 4 பிப்., 27 
2021 ஜன., 5 மார்ச் 1 
2021 ஜன., 6 மார்ச் 2




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive