பிப்ரவரி மாதச் சம்பளப்பட்டியலில் IT படிவம் தேவையில்லை (RTI)


பிப்ரவரி மாதச் சம்பளப்பட்டியலில் வருமானவரி கணக்கீட்டுப் படிவம் மற்றும் சேமிப்பிற்கான ஆவணங்கள் வைத்து சமர்பித்து அதைக் கருவூல அலுவலர் சோதித்து சரிபார்த்து ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே சம்பளம் வழங்கப்படும்.

யாரேனும் ஒருவருக்கு தவறு என்றால் பட்டியலில் உள்ள அனைவருக்கும் சம்பளம் வழங்கப்படாது.

மேலும் பிப்ரவரி மாதம் என்றாலே IT மாதம் சம்பளம் தாமதாமாகத் தான் கிடைக்கும் என்றும்
 

பிப்ரவரி மாதச் சம்பளப் பட்டியல் ஏற்கப்பட்டு சம்பளம் பெற்றால் தான் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு நிம்மதி.
கடந்த 2018 முதல் அந்த நிலை மாற்றப்பட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க முயற்சியால் பிப்ரவரி மாதச் சம்பளப்பட்டியலில் அனைத்து அலுவலர்களுக்கும் வருமான வரி கணக்கிட்டு பிப்ரவரி மாதச் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது என தலைமையாசிரியர்/உதவித் தொடக்கக் அலுவலர் சான்று வைத்தார் போதும் என சென்னை கருவூல கணக்குத்துறையில் RTI கடிதம் பெறப்பட்டுள்ளது

இன்னும் சில மாவட்டங்களில் நாங்கள் தான் வருமான வரி படிவத்தை சோதிப்போம் என சில உதவிக் கருவூலத்தில் வருமான வரி படிவம் கேட்பதாகவும் கேள்விப்பட்டதனால் இதை மீண்டும் பதிவிடுகிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் ஆசிரியர் நலனில் அக்கறையுடன்
உதுமான் அலி
மாவட்டச் செயலாளர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
திருச்சி மாவட்டம் 9790328342





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive