GO NO : 15 , DATE : 01.02.202112,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.7,700 லிருந்து ரூ.10,000ஆக உயர்த்தப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாநிலத் திட்ட இயக்குநரின் கருத்துருவை ஏற்று , மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணை மூலம் அரசுப் பள்ளிகளில் கல்விசார் ( உடற்கல்வி , ஓவியம் , இசை மற்றும் வாழ்க்கைக் கல்வி ) இணைச் செயல்பாடுகளைப் பயிற்றுவிக்கும் பொருட்டு தோற்றுவிக்கப்பட்ட 16,549 பகுதி நேரப் பயிற்றுநர் பணியிடங்களில் தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேரப் பயிற்றுநர்கள் , அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி மாணவர்களின் கல்விசார் இணைச் செயல்பாடுகளைச் சிறக்க செய்து வருவதினால் , அவர்களது பணித்திறனை மேலும் மேம்படுத்தும் பொருட்டு மேற்கண்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள இதர வழிமுறைகளுடன் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு இவர்களது மாத ஊதியத்தினை ( மே மாதம் நீங்கலாக 11 மாதங்களுக்கு மட்டும் ) ரூ .7,700 / -லிருந்து ரூ .10,000 / - ஆக ( ரூபாய் பத்தாயிரம் மட்டும் ) உயர்த்தி வழங்க முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.