10.03.2020 க்கு முன்னர் ஊக்க ஊதியம் பெற தகுதியுள்ள 105+128 இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்களுக்கு ஊக்க ஊதிய வழங்க அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


 10.03.2020 க்கு முன்னர் ஊக்க ஊதியம் பெற தகுதியுள்ள 105+128 இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்களுக்கு ஊக்க ஊதிய வழங்க அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

(ஆசிரியர்களுக்கு இதுவரை கடிதம் எதுவும் வெளியிடப்படவில்லை)


click here to download - apporval of increment order....................

அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடைநீக்கம்!


தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள திரு.வி.க. நகரைச் சேர்ந்தவர் குமார் (வயது 45). மாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அ.தி.மு.க. ஆதரவாளராகவும் உள்ளார்.

இவர், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க வீட்டில் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படை

அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், மார்ச் 29ஆம் தேதி அவருடைய வீட்டுக்குப் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விரைந்தனர்.

அதிகாரிகள் வருவதைப் பார்த்த குமார், பணப்பையை வீட்டுக்குப் பின்பக்கமாக வீசி எறிந்தார். அங்கு தயாராக இருந்த அவருடைய உறவினர் நேதாஜி என்பவர் பணப்பையை எடுக்க முயன்றார். அப்போது அவரை

காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

அரசுப்பள்ளி ஆசிரியர் குமார், நேதாஜி, அவர்களுக்கு உடந்தையாக இருந்த மருத்துவர் சரவணன் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். விசாரணையில், அந்தப் பணப்பையில் 16.50 லட்சம் ரூபாய் இருந்தது தெரிய வந்தது. வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுப்பதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே, தேர்தல் விதிகளை மீறியதாக அரசுப் பள்ளி ஆசிரியர் குமாரை, தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா, செவ்வாய்க்கிழமை (மார்ச் 30) பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் தர்மபுரி மாவட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு அறிவிப்பு வாபஸ் - மத்திய அரசு



நேற்று அறிவிக்கப்பட்ட சேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு அறிவிப்பு தவறாக வெளியிடப்பட்டுள்ளது. அது திரும்ப பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வட்டி விகிதங்களே சிறு சேமிப்புகளுக்கு தொடரும் என மத்திய நிதி அமைச்சர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பு


உபரியாக உள்ள ஆசிரியர்களை காலியாக உள்ள தேவைப்படும் பள்ளிக்கு அக்டோபர் -15 க்குள் பணி மாறுதல் செய்ய உத்தரவு



அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை காலியாக உள்ள தேவைப்படும் பள்ளிக்கு அக்டோபர் -15 க்குள் பணி மாறுதல் செய்து நவம்பர் மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவின் நகல்.
Click here to download pdf

தஞ்சை மாணவர்களிடையே தீவிரமடையும் கொரோனா பரவல்! - புதிதாக 8 மாணவர்கள், 2 ஆசிரியர்களுக்கு தொற்று உறுதி..!!



தஞ்சையில் மேலும் ஒரு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 8 பேருக்கும் 2 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி ஆகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாப்பேட்டை அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கு முதன்முதலாக கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், தஞ்சை மாவட்டத்திற்கு சென்னையோடு வணிக ரீதியாக அதிகளவில் தொடர்பு உள்ளதாலும், பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டதாலும் கொரோனா தொற்று அதிகரித்து வந்தது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 16 பள்ளிகளில் 230 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 203 மாணவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தஞ்சையில் உள்ள ஆக்சிலியம் பள்ளி மாணவர்கள் 8 பேருக்கும் ஆசிரியர்கள் இருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தஞ்சை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பத்தாம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசனை\ வாக்குச்சாவடியில் கொரோனா தடுப்பு பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது?
பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஆக்சிலியம் பள்ளிக்கு விரைந்து சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். தஞ்சையில் மட்டும் இதுவரை 17 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் கூடுதல் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்: பேராசிரியர் குணசேகரன் அறிவுறுத்தல்



வேலை வாய்ப்புகளை எளிதில் பெற மாணவர்கள் கல்வியோடு கூடுதல் திறமைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேராசிரியர் குணசேகரன் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். தங்கவயல் அரசு முதல் நிலை கல்லூரியில் புதிய மாணவர்களுக்கு வரவேற்பும், என்.சி.சி, உள்ளிட்ட மாணவர் திறன் மேம்பாட்டு குழுக்களின் தொடக்க விழாவும் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல் நிலை கல்லூரியின் முன்னாள் எச் ஒ.டி பேராசிரியர் சி.குணசேகரன் பேசும் போது,``இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புகளை பெற பட்ட படிப்பு மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை, அதற்கு கூடுதல் திறமைகளும் தேவைப்படுகிறது. மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சிகளை அளிப்பதற்கு அரசு கல்லூரிகளில் பல குழுக்கள் உள்ளது.
 அவற்றில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்று மாணவர்கள் பயன் படுத்தி கொள்ள வேண்டும். சாதனையாளர்களை பார்த்து நாமும் அது போல் முன்னேறி சாதனை படைக்க முடியும் என்ற உறுதி கொள்ள வேண்டும்’’ என்றார். நிகழ்ச்சியில் தலைமை தாங்கி பேசிய அரசு முதல் நிலை கல்லூரி முதல்வர் பேராசிரியர் எம். கிருஷ்ணமூர்த்தி பேசும் போது, 13 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கல்லூரியில் குறைந்த அளவிலேயே மாணவர் சேர்க்கை இருந்தது. தற்ேபாது தரமான கல்வி, அதிக அளவு தேர்ச்சி விகிதம், மாணவர்களிடையே ஒழுக்கம், உயர் பண்பு ஆகிய காரணங்களால் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை உள்ளது. புதிய மாணவர்கள் பழைய மாணவர்களிடமிருந்து நல்ல ஒழுக்கம் பண்புகளை கற்றுக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

அரசு பள்ளியை சேதப்படுத்திய காட்டு யானைகள்


வனப்பகுதியிலிருந்து இரவு நேரத்தில் கிராமத்தில் புகுந்த காட்டு யானைகள் அரசு பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் இரும்பு ேகட்டை உடைத்து நொறுக்கியதால் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்கள் யானைகளை தடுக்க நடவடிக்கைகளை எடுக்கும்படி வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர். குடகு மாவட்டம் சோமவாரப்பேட்டை தாலுகா கணூரு கிராமத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் வனப்பகுதிகளிலிருந்து கிராமத்திற்குள் புகும் காட்டு யானைகள் பொதுமக்களை அச்சுறுத்தியும் விளைபயிர்களையும், வீடுகளையும் நாசப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை கணூரு கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் அங்குள்ள அரசு பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளியும், பள்ளியின் கேட்டை உடைத்தும் நாசப்படுத்தியது. இதனால் அச்சமடைந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து காட்டு யானைகளை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்

கொரோனா பரவிவரும் நிலையில் பள்ளி விடுமுறை மற்றும் சனிக்கிழமை விடுமுறை பற்றி விளக்கம்

கொரோனா பரவிவரும் நிலையில் பள்ளி விடுமுறை மற்றும் சனிக்கிழமை விடுமுறை பற்றி விளக்கம்

கல்வித் தொலைக்காட்சி - ஆசிரியா்களுக்கு கல்வித்துறை உத்தரவு :




கரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், 9 முதல் பிளஸ் 1 வரையிலான வகுப்புகளுக்கு மீண்டும் கல்வித் தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


கரோனா பரவலால் நிகழ் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவா்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது. இதைத் தொடா்ந்து இரண்டாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஜூலை 15-ஆம் முதல் பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. மேலும் இந்தத் தொலைக்காட்சியின் விடியோக்கள் ஆகஸ்ட் 1 முதல் 14 தனியாா் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் ஒளிபரப்பாகின. இதற்கு மாணவா்கள், பெற்றோா் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.இந்தநிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக கரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது. இதை கருத்தில் கொண்டு 9 முதல் பிளஸ் 1 வகுப்பு வரை நடைபெற்று வந்த நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் வரும் மே மாதம் பொதுத்தோ்வு நடைபெறவுள்ளதால் பிளஸ் 2 மாணவா்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் மாணவா்களுக்கு பாடங்களை தொடா்ந்து நடத்தலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் கரோனா முதல் அலை ஏற்பட்டபோது கல்வித்தொலைக்காட்சி மற்றும் அதன் யூ-டியூப் சேனல் மாணவா்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு கற்றல்-கற்பித்தலுக்கு இதே நடைமுறை மீண்டும் பின்பற்றப்படவுள்ளது.அதன்படி தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களின் நலன் கருதி 9, 10, பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலமாக மீதமுள்ள பாடங்கள் நடத்தப்படும். தினமும் 9 முதல் பிளஸ் 1 வகுப்புகளுக்கான பாடங்களின் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் அதிகரிக்கவும் கல்வி தொலைக்காட்சி சாா்ந்த ஆசிரியா்கள் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.




தபால் ஓட்டு - சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியை விளக்கம் :


postel
தபால் ஓட்டு யாருக்கு போட்டோம் என்பதை படம் எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, தபால் ஓட்டு போடும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. தபால் ஓட்டு, யாருக்கு பதிவு செய்தோம் என்பதை, ஆதாரத்துடன், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியைஒருவர், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரை சஸ்பெண்ட் செய்து, தென்காசி மாவட்ட கல்வி அதிகாரி பிறப்பித்துள்ள உத்தரவு: தென்காசி கல்வி மாவட்டம், கீழப்பாவூர் சரகம், சுரண்டை, ஆர்.சி., நடுநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் என்பவர், தபால் ஓட்டு பதிவு செய்து, அதை முகநுால் மற்றும் 'வாட்ஸ் ஆப்'பில் பதிவிட்டுள்ளார்.
ஆசிரியை விளக்கம்:

இது, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும். இது குறித்து, தென்காசி காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார், புகார் அளித்துள்ளார். இதையடுத்து,மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி, சம்பந்தப்பட்ட ஆசிரியை, பணியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப் பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாள், தென்காசி கலெக்டரிடம் அளித்துள்ள புகாரில், தன் தபால் ஓட்டை, வேறு யாரோ பதிவு செய்து, சமூக வலைதளத்தில் பரப்பி உள்ளதாக தெரிவித்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தங்கள் தபால் வாக்குகளை செல்போனில் படம் எடுத்துக் கொண்டாலும் அதை வாட்ஸ்அப் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் எதையும் வைக்காதீர்கள் எந்த ஒரு முகநூல் பக்கத்திலும் பதிவிட வேண்டாம் தென்காசி மாவட்டத்தில் ஸ்டேட்டஸ் வைத்த பெண் ஆசிரியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் தாங்கள் அளித்த வாக்குச் சீட்டின் விவரங்களை மற்றவருடன் பகிர வேண்டாம்.


TYPES OF VOTES | 49O 49M 49MA 49N 49P | TENDERED VOTERS | CHALLENGED VOTERS | EDC | PROXY VOTERS


click here 
49P Tendered vote.

This is correct number.

In video i wrongly pronounced 49MA sorry.

49 MA test vote.



திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!


திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!* -தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில சட்ட செயலாளர் சாமி அவர்கள் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் பெண் ஆசிரியர் களுக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுக்க கோரிக்கை வைத்தனர்.மாவட்ட ஆட்சியர் அனைத்து கோரிக்கைகளையும் செய்து தருவதாக வாக்குறுதி அளிப்பு





*திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!*

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 26 ம் தேதி நடைபெற்ற தேர்தல் பயிற்சி வகுப்புகளில் po 1 இந்தி பேசுபவர்களும், po2 வாக சத்துணவு ஆயாக்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், po 3 ஆக இந்தி பேசும் ஊழியர்களும் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.

 இதைத்தொடர்ந்து அந்தந்த தொகுதிகளில் பயிற்சி பணிக்கு சென்றிருந்த சத்துணவு ஆயாக்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஹிந்தி பேசுபவர்கள் ஆகியோர் தங்களால் இந்த பணியை செய்ய இயலாது என்பதை வலியுறுத்தி அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் முறையிட்டனர்.

 இருப்பினும் இந்த பணிகளை நீங்கள் தான் செய்ய வேண்டுமென தொகுதி தேர்தல் அலுவலர்கள் பதில் அளித்து திருப்பி அனுப்பி விட்டனர்.

 இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் PRO ஆகியோர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

 இதைத்தொடர்ந்து அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் நமக்கு தொலைபேசி மற்றும் வாடஸ் அப் மூலமாக எங்களால் இப்படிப்பட்டவர்களை வைத்துக்கொண்டு எப்படி தேர்தல் நடத்த முடியும்? எங்களால் முடியாது, மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம் .26-ம் தேதி இரவு முழுவதும் தூக்கமில்லை.

 எனவே மாவட்ட ஆட்சியரிடம் பேசி மாற்று ஏற்பாடு செய்து தருமாறு அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் அ. மாயவன் அவர்களின் சங்க நிர்வாகிகளான மாவட்ட தலைவர் கே. ஜெயராமன், மாவட்ட செயலாளர் ஈ.அருள், மாவட்ட பொருளாளர் டி. தணிகாச்சலம், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் கே.பாஸ்கரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.ஆர்.வெங்கடேசன் மற்றும் மாநில சட்ட செயலாளர் சாமி ஆகியோரிடம் நுற்றுக்கணக்கான ஆசிரியர்கள் முறையிட்டனர்.

 இவர்களது கோரிக்கைகள் நியாயமானதே என்பதை உணர்ந்த சங்க நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்திக்க 27 3 2021 அன்று முடிவெடுத்தனர்.  

இதற்கு ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளும் ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டனர்.

 இதற்கிடையில் மன உளைச்சலுக்கு ஆளான அனைத்து ஆசிரியர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தருமாறு நமது நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் எவரும் ஆட்சியரை சந்திக்க முன்வரவில்லை.

 இருப்பினும் நமது சங்க நிர்வாகிகள், சத்துணவு அமைப்பாளர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரசேகர், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில துணைத் தலைவி லட்சுமி மாவட்ட தலைவர் எம். டி. மணிமேகலா ஆகியோரை மாநில சட்ட செயலாளர் சாமி அவர்கள் வரவழைத்து மாவட்ட ஆட்சியரை 27 .3 .2021 அன்று மாலை 6 .40 மணி வரை காத்திருந்து சந்தித்தனர்.

 தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள், சத்துணவு சங்க நிர்வாகிகள் அங்கன்வாடி ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் ஆட்சியர் திரு பொன்னையா அவர்களை சந்தித்து அனைத்து கோரிக்கைகளையும் முன் வைத்தனர.

 இதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறுகையில், 

 po 2 பணியில் நியமிக்கப்பட்ட சத்துணவு ஆயா, அங்கன்வாடி ஊழியர்கள், இந்தி பேசுபவர்கள் அனைவரின் விவரங்களை விரைந்து யூனிட் நம்பருடன் அளித்தால் உடனடியாக மாற்றி தருமாறு உறுதியளித்துள்ளார்.


 மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களில் பெரும்பாலானோர் பெண் ஆசிரியர்களே என்பதால் அவர்களுக்கு போக்குவரத்து வசதி மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு வசதிகளையும் செய்து தருமாறு சங்கத்தின் சார்பில் அன்பு வேண்டுகோள் விடுத்தபோது, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என ஆட்சியர் அவர்கள் உறுதி அளித்துள்ளார்.

 மேலும் 6.4.2021 ம் தேதி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அன்று இரவு தேர்தல் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்ல நடு இரவு நேரமாகிவிடுவதால் அனைத்து தேர்தல் அலுவலர்களும் மறுநாள் 7.3. 2021 அன்று காலை வீடு திரும்பக் கூடிய நிலை உள்ளது .

ஆகவே 7.3 2021 அன்று விடுமுறை அளிக்குமாறு ஆட்சியரிடம் சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

 இதற்கும் ஆட்சியர் அவர்கள் விவரங்களை பெருந்தன்மையுடன் புரிந்துகொண்டு விடுமுறை அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார் என்பதை பெருமையுடன் உங்களுக்கு தெரிவிக்கிறோம்.

 இதுபோன்ற விஷயங்களில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் நிறுவனத் தலைவர் டாக்டர் அ. மாயவன் அவர்கள் தலைமையிலான சங்கம் என்றென்றும் உறுதுணையாக இருக்கிறது என்பதை அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் உணர வேண்டும் என்பதை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

 நன்றி 

*உங்கள் சேவைக்காக*
*என்றென்றும்* 

சாமி

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள். வெளியான திடீர்அறிவிப்பு.!!!


தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை, கோவை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. அதனால் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் அத்தியாவசியம் இல்லாத பணிகளுக்கு மட்டும் படிப்படியாக கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

வெட்டி வேர் இருந்தா, உச்சி வெயில்லேயும் ஊர் சுத்தலாம் .


கொரோனா காய்ச்சல் பிரச்னையோடு, சூரியனின் உக்கிரமும் சேர்ந்து நம்மைப் படாதபாடுபடுத்தி வதைத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய நெருக்கடியான சூழலில் கோடை வெயிலின் கொடிய கரங்களால் ஏற்படும் உடல் சூட்டைத் தணித்து, மனித இனத்தின் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாத்திடும் உன்னதமான மூலிகைப் பொருளாக வெட்டிவேர் திகழ்கிறது.

மருத்துவப் பயன்கள்

தலைமுடி தொடங்கி, அடிப்பாதம் வரை பாதுகாத்திடும் தன்மை கொண்ட இவ்வேரை தண்ணீரில் ஊறவைத்து, 30 மி.லி – 60 மி.லி வரை உணவுக்குப்பின் அருந்தி வர காய்ச்சல், செரிமான குறைபாடு, வயிற்றுப்போக்கு போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளும் சிறுநீரக எரிச்சலும் குணமாகும். குழந்தைகளுக்கு 10 மி.லி. முதல் 20 மி.லி. தரலாம்.

வெயில் காலத்தில் நம்மைப் பயமுறுத்துகிற வியர்குரு, முகப்பரு ஆகியவை குணமாக, வெட்டி வேர், விலாமிச்சை, பாசிப்பயிறு, சந்தனம் ஆகியவற்றை தூளாக அரைத்து, அதனுடன் பன்னீர் கலந்து தடவி வர, எதிர்பார்த்த பலன் கிடைக்கும். சுத்தமான தேங்காய் எண்ணெயில் வெட்டிவேரை ஊற வைத்து தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி, தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது குறைந்து கருமையாக முடி வளரும். கண்களும் குளிர்ச்சியடையும். 

வெட்டிவேரினால் செய்யப்படும் நாற்காலிகள், மூலநோயின் தீவிரத்தைக் குறைத்து அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கிறது. வெட்டிவேரைக் கொண்டு செய்யப்படும் விசிறிகள் உடல் எரிச்சல், தேக சூட்டினை நீக்கி, மனம் புத்துணர்வு அடைய செய்கின்றன. கோடைக்காலத்தில் வெட்டிவேரைக்கொண்டு செய்யப்படும் தட்டிகளை ஜன்னல்களில் கட்டிவர, அறையின் வெப்பத்தைக்குறைத்து நறுமணத்தையும் குளிர்ச்சியையும் தரும்.

தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு ஏப்., 7 விடுப்பு தர கோரிக்கை :


 

சட்டசபை தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தேர்தலுக்கு மறுநாள் விடுப்பு வழங்க வேண்டும் என, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து உள்ளது.

இந்த கூட்டமைப்பினர், மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் அளித்து உள்ள மனு:சட்டசபை தேர்தல் பணியில் உள்ள, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வந்த பல ஆசிரியர்களுக்கு, விண்ணப்பித்தும் தபால் ஓட்டு கிடைக்கவில்லை. அவர்களின் சட்டசபை தொகுதியும் பிரித்து காட்டப்படவில்லை. கடைசி தேர்தல் வகுப்புக்கு முன் தபால் ஓட்டுகளை வழங்க வேண்டும்.

ஓட்டுப்பதிவு, காலை, 7:00 மணி முதல், மாலை, 7:00 மணி வரை நடப்பதால், தேர்தல் பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு, போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும்.கொரோனா பரவல் காலமாக, தேர்தல் பணியாளர்களுக்கு குடிநீர் வசதி, கழிவறை வசதி மற்றும் சுகாதார வசதிகள் செய்து தர வேண்டும்.தேர்தலை முடித்து, அதற்கான பொருட்களை ஒப்படைக்கும் பணிகள், அடுத்த நாள் வரை நடப்பதால், தேர்தல் பணி பார்க்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஏப்.,7ல் விடுமுறை அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புனித வெள்ளி விடுமுறை ரத்து!


06-04-2021 அன்று தேர்தல் நடைபெறுவதால் 02-04-2021 முதல் 04-04-2021 ஆகிய அரசு விடுமுறை நாட்களில் கருவூலம் இயங்கும். (புனிதவெள்ளி, சனி மற்றும் ஞாயிறு விடுமுறை ரத்து) - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு.
IMG_20210329_080426
I am to state that the General Elections to Tamil Nadu Legislative Assembly , 2021 and Bye Elections to Lok Sabha from 39. Kanniyakumari Parliamentary Constituency is to be held on 06.04.2021 ( Tuesday ). In this connection , all the District Election Officers have to present bills in Pay & Accounts Officers and Treasuries for passing for payment. Hence , I request you to make necessary arrangements for working of the Pay & Accounts Officers and Treasures in the districts on 02.04.2021 , 03.04.2021 & 04.04.2021 ( Friday to Sunday ) , so as to enable them to pass urgent bills for payment.


NIFT பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வை நாடு முழுவதும் நடத்த கோரிக்கை !



மார்ச் 31க்குள் செய்முறை தேர்வு
NIFT பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வை நாடு முழுவதும் நடத்த திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். NIFT பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு டெல்லியில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று சூழலில் அனைவரையும் டெல்லிக்கு அழைப்பது ஆபத்தானது. டெல்லியில் தேர்வு நடத்துவது தொலைதூர மாநிலத்தை சேர்ந்தவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது என தெரிவித்துள்ளார்.

வேலை நேரத்தை வாரத்தில் 4 நாட்களாக குறைத்தால் என்ன ஆகும்?


 

ஊழியர்களின் வேலை நேரம் தொடர்பாக மாற்றங்களை கொண்டு வர மத்திய தொழிலாளர் அமைச்சகம் தயாராகி வருகிறது. தற்போது வாரத்துக்கு 6 நாட்கள் அல்லது 5 நாட்கள் வேலை நாட்கள் எனும் முறை நடைமுறையில் இருக்கிறது. தொழிலாளர் சட்டத்தில் புதிய விதிகளைச் சேர்த்து வந்து 4 நாட்கள் மட்டுமே வேலை, அந்த 4 நாட்களும் நாள்தோறும் 12 மணி நேரம் வேலை நேரம் என்ற திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க அனுமதிக்கப்படும். இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.தொழிலாளர்கள் வாரத்திற்கு அதிகபட்சம் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்மதத்துடன், வேலை நேரத்தை 8 மணியில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கலாம். ஒரு வாரத்திற்கு 48 மணி நேரம் என்ற வரம்பை தாண்டக்கூடாது. மீதமுள்ள நேரத்தை ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இந்த விதிகளை நிறுவனங்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று அரசு நிர்பந்தம் செய்யாது. விரும்பினால், நிறுவனங்கள் இந்த விதிகளைச் செயல்படுத்திக் கொள்ளலாம்.இந்தியாவில் மட்டும்தான் இந்த திட்டம் பரிசீலனை செய்யப்படுகிறதா? என்றால் இல்லை. 


இதற்கு முன்னோடியாக நியூசிலாந்தில் பெர்பெச்சுவல் கார்டியன் என்ற நிறுவனம், 2018-ல் தனது 240 ஊழியர்களிடையே இந்த நான்கு நாள் வேலைத் திட்டத்தைச் செயல்படுத்தியது. வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே பணிபுரிந்தால், நிறுவனத்தின் உற்பத்தித்திறன், உற்பத்தி அளவு மற்றும் நோக்கம் ஆகியவற்றில் எத்தகைய தாக்கம் ஏற்படும்? என்பதை கண்டறிவதற்காக 8 வாரங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தியது. ஊதியம், விடுமுறை உரிமை மற்றும் சலுகைகள் எதிலும் மாற்றம் செய்யப்படவில்லை. ஊழியர்களின் வேலை நேரம் வாரத்தில் 37.5 மணி நேரத்திலிருந்து 30 ஆக குறைக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் ஊழியர்களின் மன அழுத்தம் 16 சதவீதம் குறைந்துள்ளது.

 வேலை-வாழ்க்கை சமநிலை 44 சதவீதம் மேம்பட்டுள்ளது. மேலும், ஊழியர்களின் அர்ப்பணிப்பு, உற்சாகம், அதிகாரம் மற்றும் தலைமைப்பண்பு அனைத்தும் மேம்பட்டன. அதேசமயம் நிறுவனத்தில் உற்பத்தித்திறனும் குறையவில்லை. இதன் காரணமாக இந்தத் திட்டத்தை நிரந்தரமாக அந்த நிறுவனம் நீட்டித்திருக்கிறது. ஊழியர்களின் விருப்பத் தேர்வின் அடிப்படையில் 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.இதேபோல் பிரிட்டனில் ஒரு சில நிறுவனங்கள் மற்றும் ஜப்பானில் மைக்ரோசாப்ட் ஆகியவை வாரத்தில் நான்கு நாள் வேலை என்ற திட்டத்தை பரிசோதனை செய்தன. 

ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை, மாறுபட்ட சூழல் உள்ளது. பெரும்பாலான ஊழியர்கள் தாங்கள் வாரத்தில் ஆறு நாட்கள் வரை வேலை செய்வதாக உணர்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. வேலைத்திறன், முன்னுதாரணமாக இருக்க விருப்பம் மற்றும் கூடுதல் வேலை செய்து பணம் ஈட்டும் விருப்பம் ஆகியவற்றில் தொழிலாளர்கள் கவனம் செலுத்துகின்றனர். எனினும், பண ஆதாயங்கள் ஆதிக்கம் செலுத்தும் காரணியாக உள்ளது என 34 சதவீதம் தொழிலாளர்கள் கூறி உள்ளனர். கூடுதல் நேரம் வேலை செய்வதன்மூலம், பதவி உயர்வு அல்லது போனஸ் பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தும் என்று 34 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எது எப்படியோ, இந்த நான்கு நாள் வேலைத் திட்டமானது, தொழிலாளர்களின் வாழ்க்கைக்கும் வேலைக்குமான பிணைப்பை பாதிக்காத வகையில் இருந்தால் மகிழ்ச்சியே.

Source Maalaimalar

கடைசி ஒரு மணி நேரம்! - கரோனா பீதியில் தேர்தல் அலுவலர்கள்!


தமிழக தேர்தல் களத்தில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளுக்கான ஆதரவு அலை, எதிர்ப்பு அலைகளைவிட கரோனாவின் வது அலையால் தேர்தல் நடக்குமா நடக்காதா? ஊரடங்கு வருமா வராதா? என்பதுதான் இப்போதைய விவாதப் பொருளாக உள்ளது திட்டமிட்டப்படி தேர்தல் நடக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவிக்க அதற்கான பணிகள் முடுக்கப்பட்டுள்ளது. ஏப். 6ம் தேதி ஓட்டுப்பதிவு நாளில், கடைசி மணி நேரத்தில் அதாவது மாலை 6 முதல் 7 மணிக்குள், கரோனா நோயாளிகளும் தேர்தல் கமிஷனால் வழங்கப்படும் பாதுகாப்பு கவச உடையும், கையுறையும் அணிந்து வந்து ஓட்டளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்தல் கமிஷன் இப்படி அறிவித்திருந்தாலும் ஓட்டுச் சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் வயிற்றில், இந்த அறிவிப்பு புளியைக் கரைத்து, பீதியில் ஆழ்த்தியுள்ளது 'நம் ஓட்டுச்சாவடிக்கு கரோனா தொற்றாளர்கள் யாரும் ஓட்டுப்போட வந்துவிடக்கூடாது என்று இப்போதிருந்தே அவர்கள் வேண்டாத தெய்வம் இல்லை மறுபக்கம் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி வாயிலாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தேர்தல் கமிஷனுக்கு முறையீடு செய்துள்ளது. இது குறித்து அதன் மாநில பொருளாளர் நீலகண்டன் கூறியதாவது: ஓட்டுப்பதிவு நாளில், கரோனா தொற்றாளர்களும் கவச உடை அணிந்து வந்து ஓட்டளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. என்னதான்கவச உடை, கையுறை அணிந்து வந்து ஓட்டு மெஷின் பயன்படுத்தினாலும் அதன்பின் அதிகாரிகள் ஓட்டு மிஷின்களைமூடி சீல் வைக்கும் பணிக்காக அதை முழுமையாக கையாள வேண்டியுள்ளது அதேபோல் ஓட்டுச்சாவடிக்குள் வரும் கரோனா பாதிப்புள்ளவர்கள் அங்கு கை வைக்கவோ, தும்மவோ, இருமவோ வாய்ப்புள்ளது. இதனால் ஓட்டுச்சாவடி அதிகாரிகள், பூத் ஏஜென்ட்டுகளுக்கும் நோய் தொற்று பரவலாம் எனவே கரோனா பாதிப்புக்குள்ளானவர்களை ஓட்டுச்சாவடிகளுக்கு வரவழைப்பதற்கு பதில், அவர்களுக்கு தபால் ஓட்டு வாய்ப்பு வழங்கலாம். ஏற்கனவே, முதியவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இம்முறை வழங்கப்பட்டுள்ளதால், கரோனா தொற்றாளர்களுக்கும் வழங்குவதில் எந்த பாதிப்பும் இருக்கப்போவதில்லை ஆனால், இதையும் மீறி கரோனா நோயாளிகளை ஓட்டுச் சாவடிகளுக்குள் அனுமதித்து அதனால் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான முழுபொறுப்பையும் அரசே ஏற்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்தேர்தல் அதிகாரிகளின் இந்த நியாயமான பயத்துக்கு தேர்தல் கமிஷன் என்ன பதில் சொல்லப் போகிறது என்பது ஒருபக்கம் இருந்தாலும், கடந்த ஆண்டு முழுவதும் எதையும் ஒழுங்கா செய்யவிடாத கரோனா தனது 2வது ரவுண்டில் தேர்தலை ஒழுங்காக நடத்தவிடாது போலிருக்கிறது என்ற சலசலப்பும் ஏற்பட்டுள்ளது இது வேறயா
ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கிலியில் இருக்க, தேர்தல் அதிகாரிகள் ஓட்டுப்போட வரும் கரோனா தொற்றாளிகள் பயன்படுத்துவதற்காக கரோனா பாதுகாப்பு கவச உடைகள் கையுறைகள் போன்றபொருட்கள் பெங்களூரில் இருந்து, திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து இறங்கியுள்ளன


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பதிவு ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடக்கம்



கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 1-ஆம் வகுப்பில் சேர்வதற்கான இணையதள பதிவு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் சேர ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் நேரடியாகச் சென்று பதிவு செய்யலாம். ஒன்றாம் வகுப்புக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி மாலை 7 மணி வரை https://kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், ஆண்ட்ராய்ட் செல்பேசி செயலி வாயிலாகவும் பதிவு செய்யலாம். இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு 08.04.2021 காலை 8 மணி முதல் 15.04.2021 மாலை 4 மணி வரை இடங்களின் அடிப்படையில் பதிவு நடைபெறும். 2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அட்டவணையின் படி https://kvsangathan.nic.in/ என்ற இணையதளத்தில் 11-ஆம் வகுப்பில் சேர்வதற்கான படிவங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது நாடு முழுவதும் 1247 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

இன்டர்நெட் இல்லாமல் வாட்ஸ் அப் பயன்படுத்தலாம்! வருகிறது சூப்பர் அப்டேட்!!


எதிர்கால தொழில்நுட்பத்தில் இணைய வசதி இல்லாவிட்டாலும் வாட்ஸ் அப் கால், மெசேஜ் அனுப்பலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

டெஸ்க்டாப் பயன்பாட்டில் குரல் மற்றும் வீடியோ அழைப்பு வசதியை வாட்ஸ் அப் சமீபத்தில் புதுப்பித்தது. இதன் மூலம் டெஸ்க்டாப் கொண்டு பயனர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த முடியும்.

அதே நேரத்தில் டெஸ்க் டாப் பயன்பாட்டில் உங்கள் சாதனம் மைக்ரோ ஃபோன், வெப்கேம் ஆகியவற்றை சப்போர்ட் செய்ய வேண்டும். அதன்பிறகு டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் மூலம் குரல் அல்லது வீடியோ அழைப்பில் பேசலாம்.

ஆனாலும் டெஸ்க்டாப்பில் குரூப் கால் செய்ய முடியாது. ஒரு நேரத்தில் ஒரு பயனரை மட்டுமே அழைக்க முடியும். இந்நிலையில் இனிவரும் நாட்களில் இண்டர்நெட் வசதி இல்லாமலேயே வீடியோ மற்றும் குரல் அழைப்புகள் செய்ய முடியும்.

வாட்ஸ் அப் தொடர்பான தகவல்களை வழங்கும் WABetalInfo இந்த தகவலை தெரிவித்துள்ளது. உங்கள் தொலைப்பேசி இணையத்துடன் இணைக்கப்படாமல் இருந்தாலும் டெக்ஸ் டாப்பில் எந்த பிரச்னையும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கால தொழில்நுட்பத்தில் பல சாதனங்களின் ஆதரவுக்கு பிறகு இணைய வசதி இல்லாவிட்டாலும் டெஸ்க் டாப் மூலம் வாட்ஸ் அப் கால், மெசேஜ் அனுப்பலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் பணி முக்கியமானதுதான்-ஆனால் உண்ண உணவுகூட தராமல், அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல் இரு நாள்கள் பணி செய்தாக வேண்டும் என்றால் இது எப்படி நியாயமாகும்? - Vikatan News



உணவு, கழிப்பிடம், போக்குவரத்து... தேர்தல் பணி ஆசிரியர்களுக்குஇதைக்கூட செய்யாதா தேர்தல் ஆணையம்?

தேர்தல்பணி முக்கியமானதுதான். ஆனால் உண்ண உணவுகூடதராமல், அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல்இரு நாள்கள் பணி செய்தாக


வேண்டும் என்றால் இது எப்படிநியாயமாகும்?

தமிழ்நாட்டில்சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்ஆணையம் தமிழக அரசிடம் கேட்டதொகை எவ்வளவு தெரியுமா? 621 கோடிரூபாய். கொரோனா அச்சுறுத்தல் காரணமாகபாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க வேண்டியிருப்பதாலும், நோய்த்தொற்றை தவிர்க்க வாக்குச் சாவடிகளின்


எண்ணிக்கை 68,000-லிருந்து 95,000 ஆக உயர்த்தப்பட்டிருப்பதாலும் இம்முறை செலவினங்கள்அதிகரிக்கும் என்று கடந்த ஜனவரியிலேயேதமிழகத் தலைமை தேர்தல் அதிகாரிசத்யபிரத சாஹூ குறிப்பிட்டிருந்தார்.



வாக்காளர்பட்டியல் தயாரிப்பு முதற்கொண்டு வாக்குப்பதிவு பெட்டியை பத்திரமாகக் கொண்டு சேர்ப்பதுவரை இதன்செலவினங்களில் அடங்கும். தேர்தல் பணிக்காக அழைக்கப்பட்டிருக்கும்அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்குசம்பளம், இன்னபிற இத்யாதி செலவுகள்எல்லாம் இதில் அடங்கும்.

கோடிக்கணக்கில்செலவு செய்து தேர்தலை ஆணையம்நடத்தினாலும், அதை களத்தில் இருந்துநடத்திக்காட்டுவது அரசுப் பள்ளி ஆசிரியர்களும்ஊழியர்களும்தான். ஆனால் அவர்களுக்கான உணவுவசதியையோ, பாதுகாப்பு வசதியையோ, போக்குவரத்து வசதியையோ தேர்தல் ஆணையம் செய்துதருவதே இல்லை. `ஒவ்வொரு முறைதேர்தல்


வரும்போதும், போருக்குச் சென்று செத்துப் பிழைத்துவருவதுபோலத்தான் இருக்கிறது எங்களது நிலை' என்றுஆசிரியர் தரப்பு வெடித்துக் குரலெழுப்புகிறது.

`என்ன பிரச்னைகள்?' என்று கேட்டதுதான் தாமதம். கோவையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர்படபடவென பொரிந்து தள்ளிவிட்டார். அவர் சொன்னதை அப்படியேஇங்கே தருகிறேன்.

அதற்குமுன்பு வாக்குப்பதிவு பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படும் நடைமுறை குறித்த சிறுவிளக்கத்தையும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.

ஒவ்வொருமாவட்டத்திலும் தேர்தல் நடத்தும் அதிகாரியாகமாவட்ட ஆட்சியர் செயல்படுவார். அவரது மேற்பார்வையில் அவரது


மாவட்டத்திலுள்ள அரசுப் பணியாளர்கள், அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் ஒதுக்கப்படும். தேர்தல் பணியை கட்டாயம் ஏற்றுக்கொண்டேஆகவேண்டும். மறுக்கமுடியாது. மறுத்தால் அவர்களுக்கு `மெமோ’ வழங்கப்படும்.

ஒரு தொகுதிக்குள் இருக்கும் ஆசிரியர்களும், பணியாளர்களும் அதே தொகுதிக்குள் தேர்தல்பணி செய்யக்கூடாது என்பது தேர்தல் விதிமுறைகளில்ஒன்று. அதனால் அவர்கள் பழக்கப்படாதவேறொரு தொகுதிக்கு தேர்தல் பணிக்காக அனுப்பிவைக்கப்படுவார்கள். அது நகரமாக இருக்கலாம். கிராமமாக இருக்கலாம். மலைப்பகுதியாகக்கூட இருக்கலாம்.

தேர்தலுக்கென்று5 நாள்கள் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். தேர்தலுக்கு முந்தைய முதல் மூன்றுவாரங்களில் மூன்று பயிற்சி வகுப்புகள்நடத்தப்படும். எப்படி தேர்தலை நடத்தவேண்டும், வாக்குப்பதிவு பெட்டியை எப்படி இயக்க வேண்டும், பிரச்னை ஏற்பட்டால் எப்படி சரி


செய்யவேண்டும், வாக்காளர் பட்டியலில் எப்படி வாக்காளர் பெயரைசரிபார்ப்பது. வாக்களிக்க அனுமதிப்பது, வாக்குப்பதிவு முடிந்ததும் எப்படி முத்திரையிடுவது எனஅனைத்தும் சொல்லித் தருவார்கள். வாக்களிக்கும் நாள், அதற்கு முந்தையநாள் என இரு நாள்கள்களத்தில் இருந்து பணியாற்ற வேண்டும்.

தேர்தலுக்குமுதல் நாள் ஆட்சியாளர் அலுவலகத்தில்காத்திருந்து, தற்காலிகப் பணியாணை பெற்று வாக்குச்சாவடிஇருக்கும் பள்ளிக்குச் செல்ல வேண்டும். மறுநாள்வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பெட்டிகளை தேர்தல் ஆணையம் எடுத்துச்செல்லும் வரை அங்கேயே காவல்இருக்க வேண்டும். அதன் பிறகே தேர்தல்பணி நிறைவடையும். கொரோனா பரவல் காரணமாகஇம்முறை தேர்தலில் வாக்களிக்கும் நேரத்தையும் அதிகரித்திருக்கிறார்கள். இதுவும் ஆசிரியர்களிடமும் அரசுஊழியர்களிடமும் கலக்கத்தை அதிகரித்திருக்கிறது.

இனி அந்த ஆசிரியை சொன்னதுஅப்படியே இங்கே...

``கொரோனாநோய்த்தொற்று பரவும் காலத்தில் பெண்ஊழியர்கள் பேருந்தில் பயணம் செய்து, மூன்றுநாள்கள் பயிற்சி முடித்து, ஏப்ரல்5-ம் நாள் ஆணையினை பெறகாலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகம்செல்ல வேண்டும். அங்கிருந்து சொந்தப் பயண ஏற்பாட்டில்மதியம் 12 மணிக்குள்


வாக்குச்சாவடியை அடையவேண்டும். வாக்குச்சாவடி அடைவதற்கு அன்று மாலை ஐந்துமணி ஆகிவிடும். ஆனால் போடுவார்கள் பாருங்களேன்ஒரு சட்டம்... மதியம் 12 மணிக்குள் வாக்குச் சாவடிக்குள் இருக்க வேண்டும் என்று. அதனால் அவசர அவசரமாக எப்படியோஒருவழியாக வாக்குச்சாவடிக்கு வந்தடைவார்கள்.

உண்ண உணவில்லாமல், தங்க எவ்வித வசதியும்இல்லாமல், போதிய அளவிலான பாதுகாப்பில்லாமல், குடிக்க குடிநீர்கூட இல்லாமல், அன்று இரவு முழுதும்கொசுக்கடியில் தூக்கம் வருகிறதோ இல்லையோதேர்தல் பொருள்களை பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் பெண்ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இருப்பார்கள்.

அடுத்தநாள் காலையில் 5.00 மணிக்கு எல்லாம் வாக்குச்சாவடியில்50 மாதிரி வாக்குப்பதிவு நடத்த ஆரம்பிக்க வேண்டும். 50 ஓட்டுகள் பதிவுசெய்ய ஏஜென்ட்கள் யாரும் வராமல் எப்படித்துவங்குவது? அவர்களுக்கு யார் சொல்வது?” என்றகேள்வியை முன்வைத்தார்.

மாதிரிவாக்குப்பதிவு என்பது, வேட்பாளர்களின் முகவர்களைவைத்துக்கொண்டு 50 வாக்குகளை பதிவு செய்து காண்பிக்கவேண்டும். வாக்கு அளிக்கும் சின்னத்தில்வாக்கு விழுகிறதா? இவருக்குத்தான் வாக்களித்தோம் என்ற உடனடி பதிவிறக்கச்சீட்டு வருகிறதா? பதிவுச் சீட்டுகளின் எண்ணிக்கையும்வாக்குகளின் எண்ணிக்கையும் சரியாக இருக்கிறதா? இவற்றையெல்லாம்பரிசோதித்துக் காட்ட வேண்டும். முடிவுகளைச்சொல்லவும், மீண்டும் இயந்திரத்தை தயார் செய்வதற்கு அதிகநேரம் எடுக்கும். இதற்குப் பெயர்தான் மாதிரி வாக்குப்பதிவு.

மீண்டும்அந்த ஆசிரியை தொடர ஆரம்பித்தார்.

``தேர்தல்நேரம் காலை 7 மணி முதல்மாலை 7 மணி வரை. அதாவது12 மணி நேரம். அதுவும் ஒருசிலவாக்குச்சாவடிகளில் 1,000 வாக்காளர்களுக்கு மேல் இருப்பார்கள். இடையில்இயற்கை உபாதைகளுக்குக்கூட செல்ல வழியில்லாமல் பணியாற்றவேண்டும்.

அதிலும்காலை, மதியம் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில்எங்களுக்கான உணவை யார் தருவார்கள்என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் மண்டலஅலுவலர்கள் மூலமாக, அல்லது உள்ளூர்கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாகஇதுவரை உணவு வழங்கியதாக சரித்திரம்இலலை.

நகர்ப்புறங்களில்ஒரு சில இடங்களில், ஒருசில நல்ல நண்பர்கள், நல்லவாக்குச்சாவடி முகவர்கள், கிராமங்களில் நம்மீது அக்கறை கொண்டஒரு சில நல்ல உள்ளங்கள், நமக்காக உணவு தருவார்கள். பெரும்பாலானஇடங்களில் உணவுக்குப் பெரும்பாடுதான்.

வாக்காளர்களின்நலன் மட்டுமே கருதி அன்றுபொது விடுமுறை விட்டும்கூட, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுதுவங்கவிருக்கிறது என்றதும், ஒரு சில வாக்காளர்கள்`நாங்கள் வேலைக்குச் செல்ல வேண்டும், விரைவில்வாக்குப்பதிவை துவங்குங்கள்' என்று உரிமையுடன் வருவார்கள். ஏழு மணிக்கு வாக்குச்சாவடி வாக்குப்பணி துவங்கும் முன் நாம் எத்தனைசீர் முறைகளை செய்ய வேண்டும்என்பது அவர்களுக்குத் தெரியாது.

மாதிரிவாக்குப்பதிவு முடித்ததும் அதனை கிளியர் செய்வதற்குகுறைந்தது 20 நிமிடங்கள் ஆகும். பிறகு அதனைசீல் செய்வதற்கு 20 நிமிடங்கள் ஆகும். அத்தனையும் ஒருவிதமான படபடப்புடன் செய்ய வேண்டும். எந்தஒரு


தவறும் நேராத வண்ணம்செய்ய வேண்டிய சூழ்நிலை எங்களுக்கு. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குச் சாவடிக்குள் வரும் ஒவ்வொரு பத்திரிகை, போலீஸ்காரர், கட்சிக்காரர்கள் அனைவருக்கும் வாக்குப் பதிவான விவரங்களை வழங்குவதுஅவசியமாகிறது.

இந்த2021 தேர்தலில், கடைசி ஒரு மணிநேரம் நோய்த் தொற்று பாதித்தநோயாளிகளுக்கான நேரம் என்று சொல்கிறார்கள். வாக்காளர்களின் 100% வாக்கு, வாக்களிப்பவர்களின் நலன்மட்டுமே பார்க்கத் தெரிந்த தேர்தல் ஆணையம், வாக்குச் சாவடிக்குள் அமர்ந்திருக்கும் அலுவலர்களும் மனிதர்கள்தான் என்பதை உணர்ந்திருந்தால் மாலை5 மணிக்கெல்லாம் வாக்குப்பதிவு நிறைவுபெறச் செய்து இருக்கும்.

எங்களுக்காககுரல் கொடுக்க எந்தக் கட்சிக்காரர்களும்வரப்போவதில்லை. அங்கு எந்த சங்கத்தின்பேச்சும் எடுபடப் போவதில்லை. தேர்தல்முடிந்து அத்தனை விபரங்களையும் 17சி-ல் பதிவு செய்துமுகவர்களுக்கு அளித்துவிட்டு முத்திரைப் பணிகள் எல்லாம் முடித்துவிட்டுமிகுந்த பசியுடன், எப்போது மண்டல அலுவலர்வருவார் என்று விடிய விடியகாத்திருந்து, அனைத்தையும் அவர்கள் வசம் ஒப்படைத்துவிட்டு, எவ்வித பாதுகாப்பும் இன்றி இரவு வேளைகளில்பெண் ஆசிரியர்கள் வீடு திரும்ப வேண்டும்.

அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இந்தப் பணியை ஐந்தாண்டுகளுக்குமூன்று முறை போர்க்களத்திற்கு செல்வதுபோல், போர் வீரர்களைப்போல் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்தாலும் எங்களது பரிதாபமான நிலையை, எங்களுக்கு உள்ள இடர்பாடுகள் பற்றிமுன்னெடுத்துச் செல்ல, எங்களது சிரமங்களைக்குறைக்க எவரும் இல்லை” என்றார்காட்டமாக.

விருதுநகரைச்சேர்ந்த ஆசிரியை ஒருவர் பகிர்ந்தகொண்ட தகவல் இன்னும் வருத்தமாகஇருந்தது.

``அறிமுகமேஇல்லாத இடத்தில் தேர்தல் பணி போடுவார்கள். அங்கு சென்றால் ஆண் ஆசிரியர்களும் இருப்பார்கள். பெண் ஆசிரியர்களும் இருப்போம். அரசுப் பள்ளிகளின் நிலைஉலகறிந்ததாயிற்றே. அதிலும் கழிப்பிட வசதிகளைக்கேட்கவா வேண்டும். ஆண்கள் எனில் சமாளித்துக்கொள்வார்கள். பெண்கள் நாங்கள் எங்கே செல்வது?

விடிகாலையில்4 மணிக்கு எழுந்து, அந்த இருட்டில் புழு, பூச்சி, பாம்பு, பல்லி இருக்குமோஎன்று பயந்து பயந்து சென்றுவிட்டுவருவோம். ஆண்கள் எழுவதற்குள் குளித்துமுடித்து பள்ளியிலேயே ஆடை மாற்றிக்கொள்வோம். இத்தனையையும்தாங்கிக்கொள்ளலாம் என்றாலும்கூட, மாதவிடாய் தினங்கள் என்றால் சிரமங்கள் இன்னும்அதிகரிக்கும்.

இவ்வளவுசெலவு செய்யும் தேர்தல் ஆணையம், தேர்தலுக்காகஅப்பள்ளிகளில் கழிப்பிட வசதியை புதிதாக ஏற்படுத்தவேண்டாம். இருப்பதை சரிசெய்து கொடுத்தால் எங்களுக்கு மட்டுமல்ல,


  அப்பள்ளிகளில் படிக்கவரும் குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அல்லது மொபைல் டாய்லெட்வசதி ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

முதல் நாளே வீட்டிலிருந்து கிளம்பிவிடுவோம். வாக்குச் சாவடிக்குள் மதியமெல்லாம் சென்றுவிட வேண்டும். அங்கே ஒரு ஏற்படும்செய்து வைத்திருக்க மாட்டார்கள். நாம்தான், டேபிள் எடுத்துட்டு வாங்க... பேனை சரி செய்து கொடுங்க... வெளிச்சம் போதவில்லை, அது இல்லை இதுஇல்லை என்று ஒவ்வொன்றாகப் பார்த்துசெய்ய வேண்டும். முடிப்பதற்குள் இருட்டிவிடும்.

நகரமென்றால்கடைகளில் சொல்லி உணவு வாங்கிக்கொள்ளலாம். கிராமம் எனில் அதோ கதிதான். பல முறை நான் பட்டினியாகத்தான்இருந்திருக்கேன். தேர்தல் பணிகளின்போது. சர்க்கரைகுறைபாடு உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தப்பிரச்னை உள்ளவர்கள் போன்றோருக்கெல்லாம் மிகவும் சிரமம்.

வாக்குப்பதிவுமுடிந்து எல்லோரும் சென்ற பிறகு, பெட்டிக்குசீல் வைத்து அந்தப் பெட்டியைஎடுத்துச்செல்லும்வரை நள்ளிரவானாலும் நாய் போல காத்துக்கிடக்கவேண்டியதுதான். பெட்டியை எடுத்துச் சென்றுவிட்டால், `நீ இருந்தாலும் சரி, செத்தாலும் சரி எங்களுக்கென்ன...' என்பதுபோலதேர்தல் பணிக்குழு எங்களை அந்த இடத்திலேயேகழற்றிவிட்டுவிடும்.

அந்த நள்ளிரவில் எப்படி நாங்கள் எங்களதுஊருக்குப் பயணிப்பது, பத்திரமாக வந்து சேர்வது? வயதானஅப்பா, அம்மா, பள்ளி செல்லும்பையன் என எனது குடும்பத்தையேஇருநாள் தனியே விட்டுவிட்டுத்தான் இப்பணிக்குவந்தாக வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் ஆனால்கூட எங்களால்செல்ல முடியாது. காரணம் இது தேர்தல்பணி. எங்களுக்குப் பிடிக்காத பணி என்றால் இந்தத்தேர்தல் பணிதான்” என்றார்.

நீலகிரியிலுள்ளதலைமை ஆசிரியர் ஒருவர் இது குறித்துசொன்னது யோசிக்க வைக்கக்கூடியதாக இருந்தது.

``சமவெளிப்பகுதிகள்எனில் ஆசிரியர்கள் ஏதாவதொரு வாகனத்தைப் பிடித்து சென்று விடுவார்கள். மலைப்பகுதியென்றால்யோசித்துப் பாருங்கள். மிருகங்களின் பயம் இருக்கும். வேறுவழியே இல்லை. நாங்கள் போய்த்தான்ஆகவேண்டும். என்னவோ செய், ஏதோசெய், ஆனால், நீ அங்கேஇருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம்சொல்லிவிடும்.

பட்டதாரிஆசிரியரை, அங்கே தலைமை ஆசிரியருக்குமேலதிகாரியாகப் போட்டுவைக்கும் அவலமெல்லாம் நடக்கும். இம்முறை சமையலர், அலுவலகஉதவியாளர் போன்றவர்களை எல்லாம் தேர்தல் பணியில்ஈடுபடுத்துகிறார்கள். அவர்களுக்கு சரியாக எழுத வராது. அவர்களைக்கொண்டு 17சி படிவத்தை நிரப்பஇருக்கிறார்கள். இது எங்கு போய்முடியுமோ தெரியவில்லை. இரண்டு நாள்களுக்கும் எங்களுக்குசோறு, தண்ணி இருக்காது. எவ்வளவோசெலவு செய்யும் தேர்தல் ஆணையம், தனதுபணியாளர்களுக்கு உணவைத் தரலாம். அடிப்படைவசதிகளை செய்து தரலாம்” என்றார்.

சோழிங்கநல்லூரிலுள்ளஆசிரியரிடம் பேசியபோது, ``வாத்தியாருங்க நிறைய சம்பளம் வாங்குறாங்க. இந்த வேலைய செஞ்சா என்னவாம்என்று குரல் கொடுப்பவர்கள்தான் இங்கேஅதிகம். எங்களுக்குத் தேர்தல் பணி சம்பளமேவேண்டாம். எத்தனையோ வேலையற்ற பட்டதாரிகள் இருக்கிறார்கள். தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த பணியை ஒதுக்கிக்கொடுத்தால்அவர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால் அதை செய்ய மாட்டார்கள். ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பதுபோல, அரசுக்கு எந்தப் பணி என்றாலும்ஆசிரியர்கள்தான் இளைத்தவர்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பா, ரேஷன் கடை கணக்கெடுப்பா, மக்கள்தொகை பதிவேடா, வாக்காளர் சேர்ப்பு முகாமா, தடுப்பூசி முகாமா... இழுத்துட்டு வா அந்த அரசுப்பள்ளிஆசிரியரை... என்றுதான் சொல்வார்கள். கல்விப்பணி பாதிக்குமே ... மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவார்களே... அதைப் பற்றியெல்லாம் கவலைஇல்லை இவர்களுக்கு.

இம்முறைகொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் கடைசி ஒரு மணிநேரம், அதாவது 6 முதல் 7 மணி ஓட்டுபோடலாம்என்கிறார்கள். அப்போது நாங்கள் முழுகவசத்தோடு இருக்க வேண்டும். அவர்களும்முழு கவசத்தோடு வரவேண்டும் என்கிறார்கள். இவர்களுக்கு தபால் வாக்குப்பதிவு கொடுக்கலாமே. அவர்களால் நோய் பரவலும் கட்டுப்படும். காகிதத்தில் கொரோனா உயிரி 10 நாள்களுக்குமேல் இருக்காது. தேர்தல் முடிவுகள் 25 நாள்கள்கழித்துத்தானே வெளிவரப்போகிறது" என்று வருத்தப்பட்டார்.

திருநெல்வேலியில்இருக்கும் அரசு ஊழியர் ஒருவரிடம்பேசியபோது, ``என்னோடு பணியாற்றும் ஊழியர்ஒருவர் 15 நாள்களுக்கு முன்னதாக உடல்நலக் குறைவிற்காக சிகிச்சை மேற்கொண்டார். உடலும் மனமும் தயாராகவில்லை. அவருக்கும் தேர்தல் பணி ஒதுக்கிஇருக்கிறார்கள். உடல்நிலை மோசமாக இருக்கும்போது பணிக்குஎப்படி செல்லமுடியும் என்று கேட்டதற்கு, சம்மந்தப்பட்டஅதிகாரிகள், ``அதெல்லாம் முடியாது நீங்க பணிக்கு போய்த்தான்ஆகவேண்டும்." என்று கோபமாக பேசிஅனுப்பியிருக்கிறார்கள். அவருக்கு வந்த ஆணையை ரத்துசெய்ய அங்கும் இங்கும் அல்லாடிக்கொண்டிருக்கிறார்" என்று தனது வருத்தத்தைப் பதிவுசெய்தார்.

புதுக்கோட்டையிலுள்ளஆசிரியர் ஒருவர், ``பல லட்சம் செலவுசெய்து பள்ளிக்கு வர்ணம் அடித்து வைத்திருப்போம். தேர்தல் விழிப்புணர்வு வாசகம், வாக்காளர் விவரம்என்றெல்லாம் போஸ்டர்களை ஒட்டி நாசம் செய்துவிடுவார்கள். பணி முடிந்ததும் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள். அதை மறுபடியும் நாங்கள்தான்சரிசெய்தாக வேண்டும். இதற்காக தனியே மூங்கில்தட்டிகளை வைத்தால் என்ன? டிஜிட்டல் முறையில்கொடுத்தால்தான் என்ன?” என்றார்.

`தேர்தல்பணி முக்கியமானதுதான். ஆனால் உண்ண உணவுகூடதராமல், அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல்இரு நாள்கள் பணி செய்தாகவேண்டும் என்றால் இது எப்படிநியாயமாகும். பணியாற்ற மாட்டோம் என்று எப்போதும் ஆசிரியசமூகம் சொன்னது இல்லை. அடிப்படைவசதிகளை, நள்ளிரவில் எங்களுக்கு பாதுகாப்புடன் கூடிய போக்குவரத்து வசதிகளைசெய்து கொடுங்கள் என்றுதானே கேட்கிறோம். 600 கோடிக்கு மேல் செலவு செய்யும்தேர்தல் ஆணையம் இதையும் செய்துதருவதுதானே நியாயமாக இருக்கும்?' என்கிறார்கள் ஆசிரியர்கள்.

இம்முறையேனும்தமிழக தேர்தல் ஆணையம் இந்தச்பிரச்னையை சரிசெய்யுமா?

- மோ.கணேசன்


2வது தேர்தல் பயிற்சி வகுப்பு புறக்கணிப்பு.



சென்னையில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அரசு ஊழியர்களில் 1500க்கும் மேற்பட்டவர்களுக்கு மதியம் சாப்பாடு வாங்கித் தராமல் பட்டினி போட்டதால், அரசு ஊழியர்கள் பயிற்சி வகுப்பை புறக்கணித்தனர். சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில், 5,911 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதில் பணியாற்றும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்புகள், நேற்று சென்னையில் உள்ள 16 மண்டலங்களில் நடைபெற்றது. அதில், ஒன்றாக விருகம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி இன்ஜினியரிங் கல்லூரியில் காலை 9 மணி முதல் 4 மணி வரை பயிற்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 2,500 அரசு ஊழியர்கள் தேர்தல் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சென்னை மாநகராட்சி சார்பில் மதிய உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், 2,500 பேரில் 1000 பேருக்கு மட்டுமே மினி மீல்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மீதமுள்ள 1,500 பேருக்கு சாப்பாடு கிடைக்காமல் பட்டினியோடு இருந்தனர். இது குறித்து அரசு ஊழியர்கள், பயிற்சி வகுப்பு நடத்தும் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், அவர் அதற்கு முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிற்பகல் மணி 2 கடந்தும் 1500 பேருக்கு உணவு கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த அரசு ஊழியர்கள் தேர்தல் பயிற்சி வகுப்புகளை புறக்கணித்து விட்டு சென்றனர். இந்த நிலையில், அடுத்த மாதம் ஏப்ரல் 3ம் தேதி மூன்றாவது கட்டமாக தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பயிற்சி வகுப்புகளில் இருந்து அரசு ஊழியர்கள் பாதியிலே வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அரசு ஊழியர்கள் சிலர் கூறுகையில், ஆசிரியர்களை பட்டினி போட்ட செயல், தேர்தல் ஆணையத்தின் அலட்சியத்தை காட்டுகிறது. பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டும் தேர்தல் ஆணையம், ஊழியர்களுக்கு சாப்பாடு வழங்காமல் ஏமாற்றியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். தபால் வாக்குச் சீட்டு வழங்கியதில் குளறுபடி: தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்பட்டன. இதில், வில்லிவாக்கம் தொகுதி வாக்காளராக உள்ளவருக்கு, கொளத்தூர் தொகுதி தபால் வாக்கு சீட்டும், ஆர்கேநகர் வாக்காளருக்கு, ஆயிரம் விளக்கு தொகுதி தபால் வாக்கு சீட்டும் அளிக்கப்பட்டது. இந்த குளறுபடி தொடர்பாக அரசு ஊழியர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், இதற்கும் அதிகாரிகள் முறையான பதில் அளிக்கவில்லை. இது திட்டமிட்டு நடந்ததா அல்லது தற்செயலாக நடந்ததா என்பதை அதிகாரிகள் விளக்க வேண்டும் என்றுஆசிரியர்கள் கூறினர்

வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளில் கேமரா பொருத்தும் பணி தொடங்கியது!


தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நேற்று துவங்கியது. இதன்மூலம் தேர்தல் நடவடிக்கைகளை டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளும் நேரடியாக பார்க்க முடியும். தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. தேர்தலில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 3,998 பேர் போட்டியிடுகிறார்கள். இதில் ஆண் வேட்பாளர்கள் 3,585 பேரும், பெண் வேட்பாளர்கள் 411 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 2 பேரும் உள்ளனர். தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவுக்காக மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என 10,528ம், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் 300 எனவும் தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் துணை ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். இந்நிலையில், மொத்தமுள்ள வாக்குச்சாவடிகளில் 50 சதவீதம் வாக்குச்சாவடிகளில், அதாவது 44,578 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, வாக்குப்பதிவு நடவடிக்கைகள் அனைத்தும் இணையதளம் மூலம் கண்காணிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மற்ற வாக்குச்சாவடிகளில் வீடியோ கேமரா மூலம் படம் எடுக்கப்படும். பிரச்னைகள் ஏற்பட்டால் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக, தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் அனைத்தும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தான் அமைக்கப்படும். அதன்படி தமிழகத்தில் சிசிடிவி கேமரா பொருத்தவுள்ள 44,578 வாக்குச்சாவடி மையங்கள் (பள்ளிகள்) கண்டறியப்பட்டு, நேற்று முதல் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தொடங்கியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 37 மாவட்டங்களிலும் இந்த பணி நேற்று தொடங்கி,ஏப்ரல் 2ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்தாலும், கேமரா பொருத்தும் பணிக்காக திறந்து வைக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 4 முதல் 6 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. கேமரா பொருத்தும் பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். பள்ளிகளில் பொருத்தப்படும் சிசிடிவி கேமராக்கள் அனைத்தும், இன்டர்நெட் மூலம் கம்ப்யூட்டரில் நேரடியாக கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் தேர்தல் நடவடிக்கைகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்), சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மேற்பார்வையில் அமைய உள்ள கட்டுப்பாட்டு அறை மற்றும் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையர்களும் நேரடியாக கண்காணிக்க முடியும். இதன்மூலம் தேர்தல் அசம்பாவிதங்களை முழுமையாக தடுக்க முடியும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் கருதுகிறார்கள்.

காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.


வரும் 31ம் தேதியுடன் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பித்தல் ஆவணங்கள் ஜூன் 30ம் தேதி வரை செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘வரும் 31ம் தேதி முடிவடையுள்ள மற்றும் கடந்தாண்டு பிப்ரவரி 1ம் தேதியுடன் முடிந்த, வாகனங்களுக்கான அனுமதி, ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு ஆகியவற்றுக்கு ஜூன் 30ம் தேதி வரை மாநில அரசுகள் கால அவகாசம் அளிக்கலாம். கொரோனா ஊரடங்கின் போது போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டிருந்ததால் வாகன ஓட்டிகள் தங்களது வாகன அனுமதி மற்றும் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல் போன்ற பணிகளை செய்ய முடியாமல் தவித்து வந்ததையடுத்து தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமல்படுத்திய பின், நான்காவது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பணிக்கு செல்லும் ஊழியர்களுக்கு சுங்க கட்டணம் விலக்கு - ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்!


தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு சுங்க கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டுமென்று ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்.6ம் தேதி நடக்கிறது. சட்டமன்ற தேர்தல் பணியில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் 20 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு ஏப்.6ம் தேதி நடக்கும் நிலையில் 2ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தேர்தல் பணியாற்றும் தொகுதிகளுக்கு தேர்தல் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் பணிபுரிகிற தொகுதி விட்டு வேறு தொகுதிகளுக்கு வாக்குபதிவுக்கு செல்ல உள்ளனர். இதனால் பல கிமீ தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே வாக்குப்பதிவுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏப்5, 6ல் வாக்கு சாவடிகளுக்கு செல்லும் போதும், ஊருக்கு திரும்பும் போதும் பெண்கள் பலர் வாடகை கார் மற்றும் சொந்த வாகனங்களில் செல்லும் நிலை உருவாகி உள்ளது. எனவே தேர்தல் பணிக்காக செல்லும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் சுங்கச்சாவடி கட்டணம் ஏதும் வசூலிக்காமல் இருமுறையும் வருவதற்கும், செல்வதற்கும் சுங்க கட்டண விலக்கு அளிக்க தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட வேண்டும். இவ்வாறு நெல்லை, தென்காசி மாவட்ட அனைத்து ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் செய்யது இப்ராகீம் மூசா, மாவட்ட செயலாளர் பாபு செல்வன், ஒருங்கிணைப்பாளர்கள் பெரியதுரை, செல்வநாயகம், ராஜேந்திரன், நிர்வாகிகள் ஆரோக்கியராசு, மோதிலால்ராஜ், சாம் மாணிக்கராஜ், மாரியப்பன், பிளஸ்ஸிங், ஜான் பாரதிதாசன் ஆகியோர் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் மினி ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவு.


 

தமிழகம் முழுவதும் ஊரடங்கு இல்லை என்று சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். பாதித்த பகுதிகளில் மட்டும் மினி ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவெடுத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு கொரோனா தொற்று குறைந்துகொண்டே வந்ததால் ஊரடங்கில் படிப்படியாக  தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத்  திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் மார்ச் தொடக்கத்தில் இருந்து மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1636 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று  எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமலாகுமோ என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, குறிப்பிட்ட தெரு, வீடு, பகுதிகளில் மட்டும் ஊரடங்கை செயல்படுத்த அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

முழு ஊரடங்கு என்று யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் தகவல்களை நம்ப வேண்டாம்  எனக் கேட்டுக்கொண்ட அவர், முகக்கவசம் அணியாமல், அலட்சியமாக இருப்பதால் தான் கொரோனா பரவுவதாகவும், முகக்கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியைக் கடைபிடிப்பதோடு, தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதிகரித்து வரும் கொரோனாவை எதிர்கொள்ள கூடுதல் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், மருந்துகள், தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன எனவும் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.

ஒன்று முதல் பிளஸ் 1 வரை ரெகுலர் மற்றும் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது


''ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ரெகுலர் மற்றும் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக் கூடாது'' என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் மைக்கேல் பெனோ பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:புதுச்சேரியில் தமிழக பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள், 1ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை ரெகுலர் அல்லது சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது. 

பிளஸ் 2 வகுப்புக்கு மட்டும் பொதுத்தேர்வு வருவதையொட்டி வகுப்பு நடத்தலாம்.சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் 1ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு ரெகுலர் மற்றும் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது.10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வர உள்ளதால், வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம். பெற்றோர் அனுமதி கடிதம் பெற்ற பிறகே வகுப்புகளை நடத்த வேண்டும். 

கொரோனா தொற்றால் பெற்றோர்கள், மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை எனில், பள்ளி நிர்வாகம், மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்க கட்டாயப்படுத்தக் கூடாது.பொதுதேர்வு நடைபெறும் வரை, கொரோனா விதிமுறைகளுடன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். விதிமீறல்கள் தொடர்பாக பெற்றோர்கள், பொதுமக்களிடம் இருந்து ஏதேனும் புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் தேர்தல் பயிற்சி வகுப்பு - Team Code - CEO Proceedings :


 தமிழக சட்டசபை தேர்தப் 06 ஏப்ர 0 2021 - | நடைபெறுவதையொட்டி தேர்தப் பணி மோற்கொள்ள உள்ள ( வாக்கு பதிவு பெறும் வாக்கு எண்ணிக்கை போபறவைக்காக ) பணியாளர்களுக்கு இரண்டாம் தேர்தல் பயிற்சி வகுப்பு 27 | 03.2021 மபறும் 28 / 03 / 2021 ஆகிய இரு நாட்களிப் நடைபெற உள்ளதால் தேர்தல் பணி ஆணை பெற்ற அலுவலர்க ! தவறாம் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொபளப்படுகிறார்கள். இரண்டாம் தேர்தப் பயிப்சி வகுப்பில் ஆணை பெற்றவர்களின் Team Code No 153 முதப் 302 வரை உபளோர் ஆணையிப் பயிற்சி வகுப்பு 28 . 03 - 2021 மாலை என குறிப்பிடப்பட்டுள்ளது மாறாக அவர்களிப் பயிற்சி வகுப்பு 27 .03 .2021 மாலை நடைபெறும் என தெரிவிக்கலாகிறது .

Election 2021 - Tally Sheet - Very Useful for Polling Officers

Election 2021 - Tally Sheet - Very Useful for Polling Officers
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்றும் போது ஆண், பெண் வாக்காளர்கள் குறித்து பதிவு செய்ய இந்த Tally sheet உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பதிவிறக்கம் செய்து Print எடுத்து வைத்துக்கொள்ளவும். Election 2021 - Tally Sheet Very Useful for Polling Officers - Download here.

தங்களது அடுத்த டோஸ் கோவிஷீல்டை போட வேண்டிய நாள் எது தெரியுமா


கோவிஷீல்டு முதல் டோஸ் எடுத்து விட்டு 
இரண்டாவது டோஸ் எப்போது எடுப்பது என்று கேட்டு வந்த 
எனதன்பு சொந்தங்களே 

இதோ உங்களுக்காக சிறப்பான ஒரு புகைப்படம் 

கடந்த 24.2.2021 முதல் முதல் டோஸ் போடப்பட்ட மக்கள் 
தங்களது அடுத்த டோஸ் கோவிஷீல்டை போட வேண்டிய நாட்கள் இந்த அட்டவணையில் இருக்கிறது. 

கோவேக்சினை பொருத்தவரை 28 நாட்கள் முதல் 42 நாட்கள் இடைவெளி என்பதில் எந்த மாற்றமும் இல்லை. 

கோவிஷீல்டுக்கு மட்டும் இடைவெளி 42 முதல் 56 நாட்களாக மாற்றம் கண்டுள்ளது 

இந்த அட்டவணையை உபயோகித்து வழிகாட்டவும் 

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை 

ஏப் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்.!




ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக ஓரளவு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு தற்போது தான் திரும்பி வருகின்றனர். ஆனால், கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து ஆலோசிக்க டெல்லியில் பிரதமர்  நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. 


மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தகுதியுள்ள அனைவரும் உடனடியாக பதிவு செய்து தடுப்பூசி போட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார். 


விஞ்ஞானிகள் மற்றும் உலக விஞ்ஞானிகள் அமைப்புகளின் ஆலோசனையின்படி, குறிப்பாக COVISHIELD கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸை 4-வது மற்றும் 8-வது வாரத்தில் வழங்க வலியுறுத்துகிறோம். 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் விரைவில் தடுப்பூசி எடுக்க வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். அது அவர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான கேடயத்தை வழங்கும் என்று தெரிவித்தார். இணை நோய்கள் இல்லாதவர்களும் ஏப்ரல் 1 முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 3  கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் கோவிஷீல்டு தடுப்பூசியும், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவோக்சின் தடுப்பூசியும் பயன்படுத்தப்படுகிறது.இதையடுத்து நாடு முழுவதும் முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்கு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 


இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,715 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29,785 பேர் குணமாகி உள்ளனர். 199 பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் 1,16,86,796 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 1,60,166 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். அதேசமயம், கொரோனா பாதித்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,11,81,253 ஆக பதிவாகியுள்ளது.

யு.பி.எஸ்.சி கட் ஆப் மதிப்பெண்கள் 2021 – வெளியீடு !!!


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது தேசிய பாதுகாப்பு அகாடமி & கடற்படை அகாடமி பணிகளுக்கான கட் ஆப் மதிப்பெண்களை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். UPSC NDA & NA (1) Cut Off Marks 2021 : UPSC மூலமாக 418 பணியிடங்களை NDA & NA (1) பணிகளுக்கான அறிவிப்பானது கடந்த ஆண்டு வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வுகள் ஆனது கடந்த 06.09.2020 அன்று நடைபெற்றது. அதற்கான இறுதி தேர்வு முடிவுகள் கடந்த வருடமே வெளியாகி விட்டது. இந்நிலையில் அவற்றிற்கான கட் ஆப் மதிப்பெண்கள் ஆனது தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அந்த மதிப்பெண் அட்டவணையினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Download UPSC NDA & NA (1) Cut Off Marks 2021

தேர்வு மையம் மாற்றம்: 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் 25-ம் தேதிக்குள் பள்ளிக்குத் தெரிவிக்கலாம்: சிபிஎஸ்இ அறிவிப்பு


சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ள விரும்பினால், வரும் 25-ம் தேதிக்குள் தாங்கள் படிக்கும் பள்ளிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மாணவர்கள் அளிக்கும் கோரிக்கைக்கு ஏற்ப இம்மாதம் 31-ம் தேதி சிபிஎஸ்இ வாரியம் தனது இணையதளத்தில் தேர்வு மையத்தை வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்குச் செய்முறைத் தேர்வுகள் ஒரு தேர்வு மையத்திலும், எழுத்துத் தேர்வை வேறு ஒரு தேர்வு மையத்திலும் இருந்தால், அவர்கள் ஒரே தேர்வு மையத்துக்கு மாற்றுமாறு கோரலாம். அதற்கான முறையான விண்ணப்பத்தைத் தாங்கள் படிக்கும் பள்ளி நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும்.

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மே 4-ம் தேதி தொடங்கி, ஜூன் 10-ம் தேதி நிறைவடைகின்றன. ஜூலை 15-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. இந்நிலையில் தேர்வு மையத்தை மாணவர்கள் மாற்றுவது குறித்து சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ கல்வி வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், "கரோனா வைரஸ் பரவல் காலத்தைக் கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ள அனுமதிக்கக் கோரி வேண்டுகோள் விடுத்தனர்.

சில மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வேறு இடத்துக்குச் சென்றுவிட்டதால், தாங்கள் பதிவு செய்த தேர்வு மையத்தில் எழுத்துத் தேர்வு எழுத முடியாத சூழலில் இருப்பதாகவும், செய்முறைத் தேர்வுகளில்கூட பங்கேற்க முடியாத சூழல் இருப்பதாகத் தெரிவித்திருந்தனர். இதன்படி, 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் செய்முறைத் தேர்வு, எழுத்துத் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ள விரும்பினால் தங்களின் எழுத்துத் தேர்வுக்குப் பதிவு செய்துள்ள தேர்வு மையம், செய்முறைத் தேர்வுக்குப் பதிவு செய்துள்ள மையம் ஆகியவற்றின் விவரங்களைப் பயிலும் பள்ளிக்குத் தெரிவித்து மாற்றுமாறு கோரி வேண்டுகோள் விடுக்கலாம்.

ஆனால், செய்முறைத் தேர்வுக்கு ஒரு மையம், எழுத்துத் தேர்வுக்கு ஒரு மையம் என்று மாணவர்களுக்கு வழங்க முடியாது. இரு தேர்வுகளையும் ஒரே தேர்வு மையத்துக்கு மாற்றுமாறு மாணவர்கள் வேண்டுகோள் விடுக்கலாம். மாணவர்கள் வேண்டுகோள் பள்ளிக்கு அனுப்பப்பட்டு, பள்ளியிலிருந்து கடிதம் சிபிஎஸ்இக்கு வந்துவிட்டால், அதன்பின் தேர்வு மையத்தையும், நகரத்தையும் மாற்ற முடியாது. மாணவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குச் செய்முறைத் தேர்வு மையம் வெளியூரில் இருந்தால், பள்ளி நிர்வாகமே தேர்வு மையத்தை மாற்றும் வகையில் கோரிக்கை விடுக்கலாம்''. இவ்வாறு சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

மேலும், 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்கள் "இம்ப்ரூவ்மென்ட் தேர்வு" எழுத வேண்டுமானால் முன்பிருந்த நடைமுறையின்படி ஓராண்டுக்குப் பின்புதான் எழுத முடியும். ஆனால், இந்தக் கல்வியாண்டு முதல் அந்த ஆண்டிலேயே இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுதும் வசதியையும் சிபிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இது ஒரு பாடத்துக்கு மட்டுமே பொருந்தும் எனவும் சிபிஎஸ்இ தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 205 ஆக அதிகரிப்பு.


தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பள்ளிகளைச் சேர்ந்த 7 மாணவர்களுக்குக் கரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 205 ஆக அதிகரித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அரசு உதவிபெறும் பள்ளியில் 58 மாணவிகள், ஒரு ஆசிரியை மற்றும் மாணவிகளின் பெற்றோரில் 9 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது அண்மையில் தெரியவந்தது. அதன்பின்பு கும்பகோணத்தில் அரசு உதவி பெறும் பள்ளி, ஒரத்தநாட்டில் தனியார் பள்ளி, பட்டுக்கோட்டை மற்றும் ஆலத்தூர் அரசுப் பள்ளிகள், தஞ்சாவூர் எம்.கே.எம்.சாலையில் உள்ள தனியார் பள்ளி, தஞ்சாவூர் மகர்நோன்புச்சாவடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஆகியவற்றில் மாணவ - மாணவியருக்குக் கரோனா  ஏற்பட்டது.

தொடர்ந்து எம்.கே.எம். சாலையில் உள்ள தனியார் பள்ளி, மகர்நோன்புச்சாவடியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி, தஞ்சாவூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகம், கும்பகோணம் தனியார் கல்லூரி திருவையாறு அரசுக் கல்லூரி, பட்டுக்கோட்டை தனியார் பள்ளி, தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் அரசுப் பள்ளி ஆகியவற்றில் கரோனா  ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை மாணவிகள், மற்றும் மாரியம்மன் கோவில் பள்ளி மாணவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

15-க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களில் தொற்று ஏற்பட்ட நிலையில் இன்று, திருப்பனந்தாள் கயிலை சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 3 மாணவர்கள் மற்றும் திருவையாறு அமல்ராஜ் தனியார் பள்ளியில் 4 மாணவர்களுக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் ஏற்கெனவே 11 பள்ளிகளை சேர்ந்த 180 மாணக்கர்களுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 90 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 கல்லூரிகளைச் சேர்ந்த 18 கல்லூரி மாணவர்களுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பள்ளி மாணவர்களில் பாதிப்பு எண்ணிக்கை 187 ஆகவும் கல்லூரி மாணவர்களின் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மாணவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 205 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிப்போருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

JEE தேர்வில் தமிழக மாணவர் அசத்தல்


ஐ.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில், பொறியியல் படிப்பில் சேருவதற்கான, ஜே.இ.இ., பிரதான நுழைவுத் தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேர்வு, கடந்த மார்ச் 16ம் தேதி துவங்கி, 18ம் தேதி வரை நடந்தது. அதற்காக, 6.19 லட்சம் மாணவர்கள் விண்ணப்பத்துஇருந்தனர்.

இந்நிலையில், அந்த தேர்வு முடிவுகள், வெளியிடப்பட்டன. முழு நுாறு மதிப்பெண்கள் பெற்று, 13 மாணவர்கள், முதலிடத்தை பகிர்ந்துஉள்ளனர். அதன்படி, தமிழகத்தின் அஷ்வின் ஆப்ரஹாம்; டில்லியைச் சேர்ந்த சித்தார்த் கால்ரா மற்றும் காவ்யா சோப்ரா; தெலுங்கானாவைச் சேர்ந்த பன்னுரு ரோஹித் குமார் ரெட்டி, மாதுர் ஆதர்ஷ் ரெட்டி மற்றும் ஜோஸ்யுலா வெங்கட ஆதித்யா. மேலும், மேற்கு வங்கத்தின் பிராதின் மோண்டால்; பீஹாரின் குமார் சத்யதர்ஷி; ராஜஸ்தானைச் சேர்ந்த, ரோஹித் குமார், மிருதுல் அகர்வால் மற்றும் ஜெனித் மல்ஹோத்ரா; மஹாராஷ்டிராவைச் சேர்ந்த அதர்வா அபிஜித் தம்பத் மற்றும் பக்ஷி கார்கி உள்ளிட்ட, 13 மாணவர்கள், முதலிடம் பிடித்து அசத்தி உள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 - அனைத்து முக்கிய தகவல்கள் அடங்கிய கையேடு


தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 கையேடு வாக்காளர்கள், வேட்பாளர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் தேர்தல் நடைமுறையில் பங்கேற்கும் அனைவருக்குமான முக்கிய தகவல்களை வழங்குகிறது.


TNAE Guide 2021 - Download here...

பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு ஓராண்டு நிறைவு: வேலையின்மை பிரச்னையிலிருந்து மீண்டு வருகிறது இந்தியா


கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு வியாழக்கிழமையுடன் ஓராண்டு நிறைவு பெறும் நிலையில், வேலையின்மை பிரச்னையிலிருந்து நாடு மெல்மெல்ல மீண்டு வருகிறது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி நாடு முழுவதும் முதல் முறையாக 21-நாள் தொடர் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மறுநாள் அதிகாலை முதல் அமலுக்கு வந்தது. இதனால் தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். வேலை இல்லாததால், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் சென்றனர். நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

பின்னர் கரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியதையடுத்து பொது முடக்கத்தில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனால், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கின. 


பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு வியாழக்கிழமையுடன் (மார்ச் 25) ஓராண்டு நிறைவு பெறுகிறது. ஆனால், வேலையின்மை பிரச்னை இன்னும் முழுவதுமாக நீங்கவில்லை. இந்தப் பிரச்னையிலிருந்து மெதுவாக மீண்டு வருகிறது நாடு.


இது தொடர்பாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ.இ) வெளியிட்டுள்ள தரவுகள் விவரம்:


கடந்த ஆண்டு பிப்ரவரியில் நாட்டில் வேலையின்மை விகிதம் 7.8 சதவீதமாக இருந்தது. பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட  மார்ச் மாதத்தில் இது 8.8 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு பிப்ரவரியில் 6.9 சதவீதமாக பதிவாகியுள்ளது.


கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை விகிதம் அதிகபட்சமாக 23.5 சதவீதமாக உயர்ந்தது. இது மே மாதத்தில் 21.7 சதவீதமாக இருந்தது. இந்த விகிதம் ஜூன் மாதத்தில் இருந்து குறையத் தொடங்கியது. ஜூனில் 10.2 சதவீதமாகவும், ஜூலை மாதத்தில் 7.4 சதவீதமாகவும் பதிவாகியது. ஆகஸ்டில் மீண்டும் 8.3 சதவீதமாக உயர்ந்து, செப்டம்பரில் 6.7 சதவீதமாக இருந்தது. அக்டோபரில் மீண்டும் 7 சதவீதமாக உயர்ந்து, நவம்பரில் 6.5 சதவீதமாக குறைந்தது. டிசம்பரில் வேலையின்மை விகிதம் 9.1 சதவீதமாகவும், ஜனவரியில் 6.5 சதவீதமாகவும் பதிவாகியது என்று அந்தத் தரவுகளில் கூறப்பட்டுள்ளது.


நிபுணர்கள் கருத்து: வேலையின்மை சூழ்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை முதல் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை சிஎம்ஐஇ தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. நாட்டு மக்களில் 55 சதவீதத்துக்கும் அதிகமானோர் வேளாண் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்தத் துறையில் சிறப்பான செயல்பாட்டைக் காண முடிகிறது. அதே நேரத்தில்  நகர்ப்புற மற்றும் தொழிலகப் பகுதிகளில் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதில் இன்னும் முன்னேற்றம் தேவைப்படுகிறது.


புதிய பணி நியமனங்களை மேற்கொள்வதில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், வேலையின்மை பிரச்னையில் சீரான முன்னேற்றத்தை அடைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. பல்வேறு திட்டங்களின் கீழ் இன்னும் இரண்டு ஆண்டுகளில் பல லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு விரும்புகிறது. இந்த நோக்கத்தை அடைய நெருக்கமான கண்காணிப்பு மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட செயல்பாடு தேவை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



வேலையின்மை சதவீதம்    2020 



பிப்ரவரி    -    7.8 

மார்ச்    -    8.8 

ஏப்ரல்    -    23.5 

மே    -    21.7 

ஜன்    -    10.2 

ஜூலை    -    7.4 

ஆகஸ்ட்    -    8.3 

செப்டம்பர்    -    6.7

அக்டோபர்    -    7.0 

நவம்பர்    -    6.5 

டிசம்பர்    -    9.1 

2021 

ஜனவரி    -    6.5 

பிப்ரவரி    -    6.9

(இந்திய பொருளாதார 

கண்காணிப்பு மைய தரவு)

Recent Posts

Total Pageviews

Blog Archive