புதுச்சேரியில் இன்று முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளியில் முழு நாட்கள் இயங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அரசாணை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரியில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் குரல் குறைந்து இருக்கும் காரணத்தினால் இன்று முதல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு , அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் முழு வேலை நாட்களாக பள்ளிகள் இயங்கும் என்று புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குனர் அரசாணை வெளியிட்டு உள்ளார்.