கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 12-ஆம் வகுப்புக்கும் விடுமுறை வழங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், 9,10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வந்த நிலையில் தஞ்சாவூரில் மட்டும் 110-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இதனால், கொரோனா பரவல் மாணவர்கள் மத்தியில் அதிகமாக பரவியதால் 9,10 மற்றும் 11 மாணவர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை தொடரும் என தமிழக அரசு அறிவித்தது. நேற்று கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 12-ஆம் வகுப்புக்கும் விடுமுறை வழங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 12-ஆம் வகுப்பு மாணவர்கள் நலன் கருதி பொதுத்தேர்வை ஆன்லைன் அல்லது பள்ளி அளவில் நடத்த வேண்டும்.
தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாக செய்யப்பட்டு வருகிறது. 12-ஆம் வகுப்பு மாணவர்களை அச்சத்துடன் பள்ளிக்கு அனுப்புவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர் என ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளனர்.