''ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ரெகுலர் மற்றும் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக் கூடாது'' என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் மைக்கேல் பெனோ பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:புதுச்சேரியில் தமிழக பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள், 1ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை ரெகுலர் அல்லது சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது.
பிளஸ் 2 வகுப்புக்கு மட்டும் பொதுத்தேர்வு வருவதையொட்டி வகுப்பு நடத்தலாம்.சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் 1ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு ரெகுலர் மற்றும் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது.10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வர உள்ளதால், வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம். பெற்றோர் அனுமதி கடிதம் பெற்ற பிறகே வகுப்புகளை நடத்த வேண்டும்.
கொரோனா தொற்றால் பெற்றோர்கள், மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை எனில், பள்ளி நிர்வாகம், மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்க கட்டாயப்படுத்தக் கூடாது.பொதுதேர்வு நடைபெறும் வரை, கொரோனா விதிமுறைகளுடன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். விதிமீறல்கள் தொடர்பாக பெற்றோர்கள், பொதுமக்களிடம் இருந்து ஏதேனும் புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.