வாகனங்களுக்கான பதிவு, புதுப்பித்தல் கட்டணங்களை 21 மடங்கு வரை உயர்த்தியது மத்திய அரசு : வருகிற அக்டோபர் முதல் நடைமுறைப்படுத்த முடிவு!! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, March 19, 2021

வாகனங்களுக்கான பதிவு, புதுப்பித்தல் கட்டணங்களை 21 மடங்கு வரை உயர்த்தியது மத்திய அரசு : வருகிற அக்டோபர் முதல் நடைமுறைப்படுத்த முடிவு!!



15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களின் பதிவுகளை புதுப்பிப்பதற்கான புதுப்பித்தல் கட்டணங்களை 21 மடங்கு உயர்த்தி இருப்பது வாகனம் வைத்திருப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காற்று மாசு மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்கும் திட்டத்தை மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்தது. அதன்படி 15 ஆண்டுகள் கடந்த வாகனங்களுக்கான பதிவை புதுப்பிப்பதோடு தரச் சான்றிதழ் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

அனைத்து பாடங்களுக்கும் PG TRB STUDY MATERIALS&MODEL QUESTION PAPERS பெற இங்கு கிளிக் செய்யவும்.  


இதனை வருகிற அக்டோபர் மாதம் முதல் நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ள மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் அதற்கான வரைவு கட்டண பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி மோட்டார் சைக்கிளுக்கான பதிவு கட்டணம் 300 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  3 சக்கர வாகனங்கள் கட்டணம் 600 ரூபாயில் இருந்து 2,500 ஆகவும், கார் மற்றும் ஜீப்களுக்கான கட்டணம் 600 ரூபாயில் இருந்து 5,000 ஆகவும் இறக்குமதி வாகனங்களுக்கான கட்டணம் 5000 ரூபாயில் இருந்து 40,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதே போல வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் பெறுவது அவசியம். அதற்கான கட்டணத்துடன் புதுப்பித்தல் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். 15 ஆண்டுகளை கடந்த மோட்டார் சைக்கிளுக்கு தகுதி சான்றிதழ் கட்டணம் 500 ரூபாயுடன் பதிவு புதுப்பிப்புக் கட்டணம் 1000 செலுத்த வேண்டும்.ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் கட்டணமாக 1000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவற்றோடு பதிவு புதுப்பிப்புக் கட்டணம் 3,500 ரூபாய் செலுத்த வேண்டும்.

வாடகை கார்களுக்கு தகுதிச் சான்றிதழ் கட்டணம் 1000 ரூபாய். புதுப்பிப்புக் கட்டணம் 7000 ரூபாயாகும்.நடுத்தர சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களுக்கான தர சான்று கட்டணம் 1,300 ரூபாயுடன் பதிவு புதுப்பிப்புக் கட்டணம் 10,000 ரூபாய் செலுத்த வேண்டும்.அதிக பாரம் ஏற்றும் லாரிகள் மற்றும் பேருந்துகளுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணம் 1500 ரூபாயாகவும் பதிவு புதுப்பிப்புக் கட்டணம் 12,500 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் வாகனங்கள் உரிய காலத்தில் தகுதி சான்றிதழ் பெற தவறினால் மாதம் தோறும் 300 முதல் 500 ரூபாயாக அபராதம் விதிக்கப்படும். அதுவே வணிக வாகனங்கள் ஆக இருந்தால் தினமும் 50 ரூபாயாக அபராதம் வசூலிக்கவும் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Post Top Ad