அதில், மத்திய அரசு, தமிழக அரசு
இந்த நிலையில், கிட்டதட்ட மூன்
தமிழக அரசு இடைக்கால பட்ஜெட் தொடரில் கணினி அறிவியல் பாடம் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி பாடத்தை கொண்டு வந்துள்ளது ஆனால் அதற்கு ஆசிரியர்கள் நியமனம் இன்றி அரசு பள்ளியில் பணிபுரியும் வேறுபாட ஆசிரியர் கொண்டே கற்பிக்க நினைக்கிறது.அதற்கு பயிற்சி கொடுப்பதாக செய்திகள் வெளிவருகின்றன .
"இதற்கெல்லாம் முன்னோடியாக சமச்சீர் கல்வியில் 2011ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சிக்காலத்தில் கணினி அறிவியல் தனிப்பாட புத்தகங்களாக அச்சிட்டு கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்காக வைத்திருந்தது. அந்த பாடமும் பாட புத்தகமும் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இன்று வரை கிராமப்புற மாணவர்களுக்கு சென்றடையவில்லை கடந்த பத்தாண்டுகளாக.
மத்திய அரசு தகவல் தொழில்நுட்பத்திற்காக கொடுக்கப்படும் நீதியை வீணாகாமல் தமிழக மாணவர்களுக்கு முறையாக சென்றடையும் விதத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாய பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டும் இதற்கு தகுந்த ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பதே இன்றைய வரை எங்களது கோரிக்கை.
வெ.குமரேசன்,மாநிலப் பொதுச் செயலாளர் ,9626545446 ,தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014