பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களின் பழைய குறியீடுகள் மார்ச் 31க்கு பிறகு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் வங்கி பணப்பரிவர்த்தனை என்பது பெரும்பாலும் டிஜிட்டல் முறைதான். அதற்கு IFSC Code, MICR குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி தனது அனைத்து கிளைகளின் IFSC மற்றும் MICRகுறியீடுகளை ஏப்ரல் 1ம் தேதி முதல் மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.
ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் மத்திய அரசு இணைத்துள்ளது. அதனால் இரண்டு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் புதிய காசோலைப் புத்தகம் பெற்றுக் கொண்டு , புதிய IFSC Coade-ஐ மாற்ற வேண்டும்.
பழைய குறியீடுகள் மார்ச் 31 பிறகு இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பணத்தை மாற்றினால், அதற்காக வங்கியிலிருந்து புதிய குறியீட்டை பெறவேண்டும்.
வாடிக்கையாளர்கள் காசோலை புத்தகம், IFSC code போன்றவற்றை மாற்ற வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கூடுதல் விவரங்கலுக்கு வங்கியின் 18001802222, 18001032222 ஆகிய கட்டணமில்லா எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதால் வாடிக்கையாளர்கள் தங்களது காசோலைப் புத்தகம் மற்றும் IFSC code போன்றவற்றை மாற்றிக்கொண்டால் தொடர்ந்து வங்கிச் சேவைகளைப் பெறலாம் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.