அரசுபள்ளிகளில் கணினி பாடம் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கண்துடைப்பா இல்லை தேர்தலுக்கான வெற்று அறிக்கையா? இதன் பின்னணி என்ன என்பது குறித்து தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் விளக்கியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசு தனது இடைக்கால பட்ஜெட் நேற்று அறிவித்ததில், கல்வித்துறைக்கு ரூ 34,181.73 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது, இறுதியில், 6 முதல் 10ம் வகுப்பு வரை கணிப் பொறியல் அறிமுகம் செய்யப்படும் என்ற ஒற்றை வார்த்தை இருந்தது.
முழுமையான விளக்கம், செயல்பாடுகள், கணினி ஆசிரியர்கள் வேலை வாய்ப்பு எந்த ஒரு விளக்கமும் பட்ஜெட் குறிப்பில் இல்லை என ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதுவும், இந்த அறிவிப்பு முழுக்க முழுக்க தேர்தல்யொட்டி வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக அரசு புதிய பாடத்திட்டத்தில் கணினியியல் பாடத்தைக் இன்று வரை கொண்டு வராதது ஏன்?
இன்றைய கால கட்டத்தில் கணினி சார் துறைகள் அசுர வளர்ச்சி நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு, பெரும்பாலான தனியார் பள்ளிகள் தொடக்க வகுப்பிலேயே அவர்களுக்கு கணினி பாடங்களை நடத்தி வருகின்றனர். அரசு பள்ளியில் ஒரு மாணவன் 11ம் வகுப்பில்தான் கணினி அறிவியல் படிக்க முடிக்கிறது, அதனால் அவர்கள் உயர்கல்வியில் பல இடர்பாடுகளை சந்திக்கின்றனர். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கும் கணினி கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், "ஒன்றாம் முதலே கணினி அறிவியல் பாடப்பிரிவை அரசு பள்ளிகளில் ஆறாவது பாடமாக தொடங்க வேண்டும் என்றும், பள்ளி மாணவர்களுக்கு கட்டாயப் பாடமாக கணினி பாடத்தை பயிற்று வைக்க வேண்டும் என்று பிரதான கோரிக்கையாக முழங்கி வருகின்றோம்.
தற்போது நடைமுறையில் இருக்கும் புதிய பாடத்திட்டத்தில் அரசுப் பள்ளியில் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பு முதலே கொண்டு வர வேண்டும் என்று புதிய பாடத்திட்டத்திற்கான கருத்துகேட்பில்-25 ஆயிரம் மனுக்கள் பொதுமக்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் வழங்கினோம். நூறு தடவைக்கு மேல் அமைச்சர், செயலர், இயக்குனா், முதல்வர் தனிப்பிரிவு என பல பேர் சந்தித்து மனு வழங்கியும், கிடப்பில் அப்படியே பதிலற்று கிடப்பில் போட்ட அரசு.தற்போது மட்டும் கணினி பாடத்தின் மீது
திடீர் அக்கறை எதற்கு???
"சமச்சீர் கல்வியில் 2011ல் ஆறாவது பாடமாக கொண்டுவரப்பட்ட கணினி அறிவியல் பாடமும், பாடப் புத்தகமும்:" தமிழக அரசு பள்ளிகளில் பயிலும்
கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில்
திமுக ஆட்சியில் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்களால் சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் பாடம் தனி பாடமாக கொண்டு வரப்பட்டது.
அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் இதற்கான கருத்துரு 2009ஆம் ஆண்டே தோற்றுவிக்கப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்தியது 2011-ம் கல்வியாண்டில் கணினி அறிவியல் பாடத்திற்கு என்றே தனி பாடப்புத்தகங்கள் 6 முதல் 10 வரை மாணவர்களுக்கு அச்சடிக்கப்பட்டது. இதற்கான பாட வேலைகளையும் செய்முறை வகுப்புகளும் அன்றே
அரசு பள்ளிகள் கொண்டுவர இருந்தார் "மாண்புமிகு முதல்வர் கலைஞர்".ஆட்சி மாற்றத்தின் காரணமாக அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும் 28 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு 150 கோடி செலவில் அச்சிடப்பட்ட கணினி அறிவியல் பாடத்தையும்,பாட புத்தகங்களையும் கடந்த பத்து வருடங்களாக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்காமல் வஞ்சனை செய்தது அதிமுக அரசு.
உலகிற்கு மறைக்கப்பட்ட 6 -10 கணினி பாட புத்தகத்தின் இன்றைய நிலை: தமிழ்நாடு பாடநூல் கழகம் வழங்கிய கணினி அறிவியல் பாட புத்தகத்திற்கான RTI- பதில்.
கடந்த பல வருடங்களாக இந்த புத்தகத்திற்காக போராடி கணினி அறிவியல் பாட புத்தகம் இறுதியில் என்னவாயிற்று என்று தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க இருந்த பாட புத்தகங்கள் அனைத்தும் குப்பை கழிவுகளாக மாற்றப்பட்டது என்ற அதிர்ச்சித் தகவலை தந்துள்ளது.
தமிழக கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் அரசு பள்ளியில் கணினி அறிவியல் பாடத்தை கற்க வேண்டும் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக அச்சடிக்கப்பட்ட பாட புத்தகங்களை அனைத்தையும் குப்பைத் தொட்டியில் போட்டு அழகு பார்த்தது அரசு.
அண்டை மாநிலங்களில் கணினி பாடத்தின் நிலை !!
மேலும் நமது சமச்சீர் கல்வியை பின்பற்றி அண்டை மாநில அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணினி கல்வியை தொடக்க வகுப்பு முதலே மாணவர்களுக்கு கட்டாயப் பாடமாகபயிற்று வருகிறது. குறிப்பாக, கேரள மாநிலத்தில் கணினி பாடம் ஒன்றாம் வகுப்பு முதலே மலையாளம் ஆங்கிலம் நமது தாய்மொழியான தமிழில் வழங்கப்படுகிறது, அங்குள்ள தமிழ் மாணவர்களுக்கு பயிற்று வைக்கப்படுகிறது. இங்குள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உயர்தரமான கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு அரசு பள்ளிகளில் பொதுத் தேர்வில் கணினி படத்தில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் கணினி படத்திற்கு முக்கிய த்துவம் தந்து . மாணவர்களுக்கு நல் கல்வி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நல் கல்வி கிடைத்திட உயரிய வழிவகை செய்திருக்கிறது கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளிக்கு கொண்டு வந்ததன் மூலம் கடந்த சில வருடங்களாக அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையின் உச்சத்தில் கேரள அரசு உள்ளது.
கணினி பாடத்திற்கு வந்த நிதியும் பாழ் காரணம் என்ன?
மத்திய மனிதவள மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.900 கோடி நிதி கணினி அறிவியல் பாடத்திற்காக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிதி அப்படியே மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பியது மாநில அரசு.நிதியை மீண்டும் பெற 'பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மீண்டும் நிதியைப் பெற்று அந்த நிதியை 2019 ஆம் கல்வி ஆண்டில் தான் அரசு பள்ளிகள் 540 கோடி கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டது .
இதனால் "அரசு பள்ளிகள் பின்தங்கவும், தனியார் பள்ளிகள் அசுர வளர்ச்சியும் பெற இதுவும் ஒரு காரணம். பல அமைச்சர்கள் மாறி, மாறி பதவிக்கு வந்த போதிலும், ஒரு மாற்றமும் இல்லை, ஏமாற்றம்தான் அதிகம் இருந்தது என்று வேதனை தெரிவிக்கிறார்கள் கணினி ஆசிரியர்கள்.
இதனை கருத்தில் கொண்டு, கணினி அறிவியல் பாடத்தில் தொடக்க வகுப்பில் அறிமுகம் செய்தால், ஆசிரியர்கள் இலவசமாக பாடம் தயராக இருக்கிறோம் என்று நாங்கள் அரசுக்கு மனுவாக அனுப்பியிருந்தோம் அதனையும் அரசு நிராகரித்தது. ஒன்றாம் வகுப்பு முதலே கணினி பாடம், மாணவர்களுக்கு தரமான கல்வி, நேர்முறையான முறையில் ஆசிரியர்கள் நியமனம் (குறைந்தபட்ச ஊதியமாக இருந்தாலும் பரவாயில்லை) உள்ளிட்டவை நிறைவேற்றம் என்பது எங்களின் கோரிக்கையாக உள்ளது.
கணினி ஆசிரியர்களின் இன்றைய நிலை:
தமிழகம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் பேர் கணினி அறிவியலில் b.ed பட்டம் பெற்று உள்ளோம். அனைவரும் அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகங்களில் (TNTEU)பயின்றவர்கள்.நாங்கள் முறையான பல்கலைக்கழகங்களில் பயின்றும் பட்டம் பெற்றும் எங்களுக்கு எந்த ஒரு அங்கீகாரம் தமிழகத்தில் அதுவரை இல்லை. சமச்சீர் கல்வியில் வெளிவந்த
கணினி அறிவியல் பாடத்தை மட்டும் நடைமுறைப்படுத்தி இருந்தால் எங்கள் வாழ்வு இன்று கேள்விக்குறி ஆகியிருக்காது.சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் பாடத்தை அதிமுக அரசு மக்களுக்கும் மாணவர்களுக்கும் தெரியாமல் மறைத்து விட்டது. 60000
கணினி ஆசிரியர் குடும்பங்களின் வாழ்வாதாரம் இன்றுவரை கேள்விக்குறியான நிலையில் உள்ளது .
கணினி ஆசிரியர்கள் TET,AEEO,DEO போன்ற தேர்வுகள் கிடையாது .
2011ஆம் ஆண்டு அதிமுக அரசு வந்தவுடன் பகுதிநேர ஆசிரியர்களை பணியமர்த்தியது. அதில் பாடமம் பாட புத்தகம் இல்லாமல் கணினி பயிற்றுநர்களுக்கான ஆசிரியர்களையும் நியமனம் செய்தது அதில் கூட கணினி அறிவியலில் b.ed முடித்தவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் எவ்வித கல்வித் தகுதியும் இன்றி பலர் இந்த வேலைவாய்ப்பில் உள்ளனர் உள்ளனர்.ஒரு சிலர் மட்டும் தான் b.ed படித்தவர்கள் உள்ளனர். ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு வைத்து ஆள் எடுக்கும் அரசு கணினி அறிவியல் பாடத்திற்கு மட்டும் எவ்வித கல்வித் தகுதியும் இன்றி நியமனம்.
இது நாங்கள் சொன்ன பதில் அல்ல தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அரசு சொன்ன பதில்.
இதனால் நொந்துபோன கணினி ஆசிரியர்கள் கடந்த பத்து வருடங்களாக தனியார் பள்ளியில் கூட வேலை கிடைக்காத ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது 814 ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில் கூட திடீரென்ற வந்த அரசாணையால் 60 ஆயிரம் பேரில் சுமார் 25 ஆயிரம் பேர் மட்டும் தேர்வு எழுத முடிந்தது மீதமுள்ள 35 ஆயிரம் நம்பர்கள் தேர்வை கூட சந்திக்க முடியவில்லை.
பத்தாம் வகுப்பு தேர்வு கூட முறையாக நடைபெறும் இந்த காலகட்டத்தில் எவ்வித குற்றங்களும் முறைகேடுகளும் நடைபெறாமல் இருக்க சிசிடிவி ஒளிப்பதிவு கேமராக்கள் வைத்து தேர்வு நடத்துவதாக கூறிய அரசு. எந்த ஒரு தேர்வு அறையில் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை.
கணினி பயிற்றுனர்காண ஆசிரியர் தகுதித் தேர்வைகுறித்த நேரத்துக்கு (10.00am to 1.00pm)நடத்தவில்லை.தேர்வில் ஒரே வினாத்தாளை வைத்து கொண்டு இரவு 8 மணி வரை கூட தேர்வு நடந்த ஒரு அவலம் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது கைபேசி வாயிலாகவும் குழுவாக அமர்ந்தும் தேர்வு எழுதியதினர்.பவ குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கண்டன குரல் எழுப்பியும் அரசு அவசர கோலத்தில் பணிநியமனம் செய்தும் அழகு பார்த்தது.
பத்து ஆண்டுகள் கழித்து பட்ஜெட் தொடரில் வெளியான அறிவிப்பு நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயத்தில், முறையான விளக்க கூறுகள் இல்லாததால், நாங்கள் பலத்த சந்தேகம் அடைகிறோம். எங்கள் அனுமானத்தின்படி, தமிழக அரசு 6 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு டேப் மட்டும் வழங்கவிட்டு, பள்ளியில் உள்ள பிற பாட ஆசிரியர்களை வைத்தே அவர்களுக்கு பாடம் கணினி ஆசிரியர் இன்றி கணினி கேள்வியை சொல்லிதரலாம், அதுக்காக பிற பாட ஆசிரியர்களுக்கு துறை மூலம் பயிற்சி நடத்தவும்.தற்போது அந்த பயிற்சியும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது செய்திகள் வெளியாகின்றது.
கணினி ஆசிரியரின்றி எப்படி கணினிக்கல்வி சாத்தியமாகும்!!
இந்த செயல்பாட்டில் எவ்வித மாற்றமும் இருக்காது.அரசு பள்ளி மாணவர்களுக்கு எந்த ஒரு கல்விசார்ந்த மாற்றமும் நடக்கப்போவதில்லை, வீணாக நீதி தான் வீணடிக்கப்படும். மற்ற பாடங்களைப் போதிக்க அந்தந்த பாடத்திற்கு அந்தந்தத் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் இருக்கும்போது நாளுக்கு நாள் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் கணினி அறிவியல் பாடத்தை பயிற்றுவிக்க அதற்கு உரிய துறையில் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.
."மருத்துவமனையில் பணிபுரியும் அனைவருக்கும் மருத்துவருக்கான பயிற்சி அளித்து மருத்துவராக்க முடியுமா? அது போன்று எப்படி பிற பாட ஆசிரியர்களுக்கு மூன்று நாள் பயிற்சி முடித்துவிட்டு கணினி அறிவியல் பாடத்தை நடத்த முடியும் என்பது எங்களது பெரும் கேள்வியாக உள்ளது.
குறைந்தபட்சம் இந்த பட்ஜெட் அறிவிப்பில், 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் தனிப்பாடமாக கொண்டு வரப்படும், செய்முறை வகுப்புகள் நடத்தப்படும், ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் என்ற தகவல் கூட இல்லை. இந்த அறிவிப்பை தேர்தலுக்கான தேர்தலுக்கான வெற்று அறிவிப்பாகவே நாங்கள் கருதுகிறோம் என அந்த அறிக்கையில் குமரேசன் தெரிவித்துள்ளார்.