தேர்தல் பணிக்கு செல்ல இருக்கும் மதிப்பிற்குரிய ஆசிரியர்களே அரசு ஊழியர்களே....
#உங்களுக்கு_ஒரு_பணிவான_வேண்டுகோள்.
நாம் செல்லும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அப்பள்ளி ஆசிரியர்கள், ஊர்மக்கள் மற்றும் பல நல் உள்ளங்களால் அப்பள்ளியின் உட்புற வெளிப்புற சுவரிலும் ஒவ்வொரு வகுப்பறையிலும் பல வண்ண ஓவியங்களும், பாடத்தொடர்புடைய படைப்புகளும் கற்றல் சார்ந்த ஓவியங்களும் வரையப்பட்டிருக்கும் எழுதப்பட்டிருக்கும்.
அவற்றின் மீது வேட்பாளர்களின் சின்னங்களை பசைகொண்டு ஒட்டி அவர்களின் உழைப்பை பாழாக்கி விடாதீர்கள். மாறாக செல்லோடேப் கொண்டோ அல்லது எதுவும் எழுதப்படாத பகுதியில் அதை ஒட்டுங்கள்
ஒருநாள் தானே நமக்கென்ன என்று அந்த உழைப்பில் ஒட்டி அதை சிதைக்க வேண்டாம். ஏனெனில் அதை உருவாக்க அவர்கள் எத்தனை நாள் கஷ்டப்பட்டிருப்பர் என்று அவர்கள் இடத்தில் இருந்து சிந்தித்து அந்த வகுப்பறையை வாக்குச்சாவடியாக மட்டும் பார்க்காமல் அதில் உள்ள உழைப்பை பார்ப்போம்
கடந்த முறை எங்கள் பள்ளியில் 1 லட்சம் மதிப்பில் பள்ளியின் அனைத்து உட்புற வெளிப்புற சுவற்றிலும் மிக உயர்ந்த வண்ணங்களை தீட்டி வைத்திருந்தோம், அவை அனைத்திலும் பசை ஒட்டிய காகிதத்தால் நம்மவர்கள் அலங்கரித்திருந்தனர், மறுநாள் பள்ளி சென்று பார்த்ததும் எங்களுக்கு மனமே உடைந்துவிட்டது, இதற்கா இத்தனை சிரமப்பட்டோம் என்று, இத்தனைக்கும் அந்த சின்னங்களை ஒட்டுவதற்கு பலகைகளும் வைத்து சென்றிருந்தோம்.
இதுபோல் இன்று எத்தனையோ பள்ளிகள் வண்ணமயமாக அந்த பள்ளி ஆசிரியர் ஊர்மக்களால் ஜொலித்துக்கொண்டு இருக்கிறது, அதை சிதைத்துவிடாதீர்கள் இது அனைவரின் அன்பு வேண்டுகோள்.
இவண்
#பட்டாம்பூச்சிகள்....