தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 1000ஐ நெருங்கும் வகையில் ஒரேநாளில் 945 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
படிப்படியாக குறைந்த கொரோனா பாதிப்பு மார்ச் 10ஆம் தேதி முதல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 800க்கு மேல் இருந்த நிலையில் இன்று 900ஐ தாண்டியுள்ளது. நீண்டநாட்களுக்குப்பின் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 945 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி சுகாதாரத்துறை:
''தேர்தல் காலமானதால் பரப்புரைகளில் பங்குபெறும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என வலியுறுத்தப்பட்டு வந்தாலும், பெரும்பாலும் அது கடைபிடிக்கப்படுவதில்லை என்பதே கொரோனா தொற்று அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
மேலும், கொரோனா குறித்த பயம் மக்களிடையே பெரும்பாலும் குறைந்துவிட்டது. அதேசமயத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் இறப்பு எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால்தான் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாக பதிவாகி இருக்கிறது'' என்று கூறியுள்ளது.
கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தொடங்கிவிட்டதாக நிபுணர்கள் தெரிவித்துவருகின்றனர்