தேசிய வருவாய் மற்றும் தகுதிப் படிப்புதவி தொகை பெறுவதற்கான தேர்வுகளுக்கான விடைக்குறிப்புகளை மாணவர்கள் சரிபார்த்து 12ம் தேதிக்குள் தங்களின் ஆட்சேபணைகளை தெரிவிக்க வேண்டும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
ஆண்டு தோறும் நாடு முழுவதும் நடத்தப்படும் தேசிய வருவாய் மற்றும் தகுதி படிப்புதவி தொகை தேர்வு கடந்த 21ம் தேதி நடந்தது. தமிழகத்தில் பல ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை (Answer Key) தற்போது தேர்வுத்துறை தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் தங்கள் விடைகளை சரிபார்த்துக்கொள்ள, www.dge.tn.gov.inஎன்ற இணைய தளத்தில் பார்க்கவும். இந்த விடைக்குறிப்பில் ஏதாவது மாற்றம் இருந்தால், மாணவர்களும் பெற்றோரும் 12ம் தேதிக்குள் ntsexam2019@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும்.