தேர்தல் பணிக்கு வருமாறு நோய்தாக்கமுற்ற ஆசிரியர்களை கல்வித்துறையினர் கட்டாயப்படுத்துவதாக புகார் தெரிவித்து ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப் , 6 ம் தேதி நடக்கிறது , தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் அலுவலர் பணிகளுக்கு ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியது . அதன் படி ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலகங்களிலும் , அரசு ஊழியர்கள் அவர்கள் பணியும் உயர் அதிகாரிகளிடமும் விண்ணப்பித்துள்ளனர். உடல் நலக்குறைவு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக தேர்தல் பணியில் பங்கேற்க முடியாத ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் அதற்கான ஆவணங்களை காட்டினால் அவர்களுக்கு - தேர்தல் பணியில் விலக்கு | அளிக்குமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக விண்ணப்பிக்க வேண்டும் என கூறியதன் பேரில் அனைத்து ஆசிரியர்களும் விண்ணப்பித்திருந்தனர். தற்போது விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு கல்வித் துறை மூலம் அரசாணை வழங்கப்பட்டுவருகிறது.
Post Top Ad
Monday, March 22, 2021
Home
Unlabelled
உடல்நலக்குறைவான ஆசிரியர்களை தேர்தல் பணிக்கு அழைத்து மிரட்டும் அதிகாரிகள்!