தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள்: தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவிப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, March 10, 2021

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள்: தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவிப்பு


தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல்  தேர்வுகள் ஏப்ரல் மாதம்நடைபெறும் என தொழில்நுட்பக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின்தலைவருமான கே.விவேகானந்தன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:


இந்த ஆண்டுக்கான தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பப் படிவத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் (www.tndte.gov.in/site) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.20. தேர்வுக்கட்டணம் ஜுனியர் தேர்வுக்கு ரூ.65, சீனியர் தேர்வுக்கு ரூ.85. இண்டர் தேர்வுக்கு ரூ.80, ஹைஸ்பீடு தேர்வுக்கு ரூ.130.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய கட்டணத்துக்கான செலான் மற்றும் இதர ஆவணங்களுடன் மார்ச் 26-க்குள் நேரில்அல்லது தபால் மூலம் ‘தலைவர்,தேர்வு வாரியம், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், கிண்டி, சென்னை - 600025’ என்ற முகவரி யில் சமர்ப்பிக்க வேண்டும்.

மார்ச் 30 வரை அபராதக் கட்டணம் ரூ.5 செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 044-22351018, 22351014 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிவிப் பில் கூறப்பட்டுள்ளது.

Post Top Ad