தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு, முன்னுரிமை அடிப்படையில், கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில், நான்கு லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இப்பணியில் ஈடுபடும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும், கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என, மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளன.
இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில், ''தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு, கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது; கட்டாயம் கிடையாது. அவர்கள் விருப்பப்பட்டால், முன்னுரிமை அடிப்படையில், கொரோனா தடுப்பூசி போடப்படும்,'' என்றார்.