திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!


திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!* -தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில சட்ட செயலாளர் சாமி அவர்கள் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் பெண் ஆசிரியர் களுக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுக்க கோரிக்கை வைத்தனர்.மாவட்ட ஆட்சியர் அனைத்து கோரிக்கைகளையும் செய்து தருவதாக வாக்குறுதி அளிப்பு





*திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!*

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 26 ம் தேதி நடைபெற்ற தேர்தல் பயிற்சி வகுப்புகளில் po 1 இந்தி பேசுபவர்களும், po2 வாக சத்துணவு ஆயாக்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், po 3 ஆக இந்தி பேசும் ஊழியர்களும் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.

 இதைத்தொடர்ந்து அந்தந்த தொகுதிகளில் பயிற்சி பணிக்கு சென்றிருந்த சத்துணவு ஆயாக்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஹிந்தி பேசுபவர்கள் ஆகியோர் தங்களால் இந்த பணியை செய்ய இயலாது என்பதை வலியுறுத்தி அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் முறையிட்டனர்.

 இருப்பினும் இந்த பணிகளை நீங்கள் தான் செய்ய வேண்டுமென தொகுதி தேர்தல் அலுவலர்கள் பதில் அளித்து திருப்பி அனுப்பி விட்டனர்.

 இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் PRO ஆகியோர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

 இதைத்தொடர்ந்து அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் நமக்கு தொலைபேசி மற்றும் வாடஸ் அப் மூலமாக எங்களால் இப்படிப்பட்டவர்களை வைத்துக்கொண்டு எப்படி தேர்தல் நடத்த முடியும்? எங்களால் முடியாது, மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம் .26-ம் தேதி இரவு முழுவதும் தூக்கமில்லை.

 எனவே மாவட்ட ஆட்சியரிடம் பேசி மாற்று ஏற்பாடு செய்து தருமாறு அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் அ. மாயவன் அவர்களின் சங்க நிர்வாகிகளான மாவட்ட தலைவர் கே. ஜெயராமன், மாவட்ட செயலாளர் ஈ.அருள், மாவட்ட பொருளாளர் டி. தணிகாச்சலம், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் கே.பாஸ்கரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.ஆர்.வெங்கடேசன் மற்றும் மாநில சட்ட செயலாளர் சாமி ஆகியோரிடம் நுற்றுக்கணக்கான ஆசிரியர்கள் முறையிட்டனர்.

 இவர்களது கோரிக்கைகள் நியாயமானதே என்பதை உணர்ந்த சங்க நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்திக்க 27 3 2021 அன்று முடிவெடுத்தனர்.  

இதற்கு ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளும் ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டனர்.

 இதற்கிடையில் மன உளைச்சலுக்கு ஆளான அனைத்து ஆசிரியர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தருமாறு நமது நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் எவரும் ஆட்சியரை சந்திக்க முன்வரவில்லை.

 இருப்பினும் நமது சங்க நிர்வாகிகள், சத்துணவு அமைப்பாளர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரசேகர், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில துணைத் தலைவி லட்சுமி மாவட்ட தலைவர் எம். டி. மணிமேகலா ஆகியோரை மாநில சட்ட செயலாளர் சாமி அவர்கள் வரவழைத்து மாவட்ட ஆட்சியரை 27 .3 .2021 அன்று மாலை 6 .40 மணி வரை காத்திருந்து சந்தித்தனர்.

 தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள், சத்துணவு சங்க நிர்வாகிகள் அங்கன்வாடி ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் ஆட்சியர் திரு பொன்னையா அவர்களை சந்தித்து அனைத்து கோரிக்கைகளையும் முன் வைத்தனர.

 இதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறுகையில், 

 po 2 பணியில் நியமிக்கப்பட்ட சத்துணவு ஆயா, அங்கன்வாடி ஊழியர்கள், இந்தி பேசுபவர்கள் அனைவரின் விவரங்களை விரைந்து யூனிட் நம்பருடன் அளித்தால் உடனடியாக மாற்றி தருமாறு உறுதியளித்துள்ளார்.


 மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களில் பெரும்பாலானோர் பெண் ஆசிரியர்களே என்பதால் அவர்களுக்கு போக்குவரத்து வசதி மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு வசதிகளையும் செய்து தருமாறு சங்கத்தின் சார்பில் அன்பு வேண்டுகோள் விடுத்தபோது, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என ஆட்சியர் அவர்கள் உறுதி அளித்துள்ளார்.

 மேலும் 6.4.2021 ம் தேதி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அன்று இரவு தேர்தல் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்ல நடு இரவு நேரமாகிவிடுவதால் அனைத்து தேர்தல் அலுவலர்களும் மறுநாள் 7.3. 2021 அன்று காலை வீடு திரும்பக் கூடிய நிலை உள்ளது .

ஆகவே 7.3 2021 அன்று விடுமுறை அளிக்குமாறு ஆட்சியரிடம் சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

 இதற்கும் ஆட்சியர் அவர்கள் விவரங்களை பெருந்தன்மையுடன் புரிந்துகொண்டு விடுமுறை அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார் என்பதை பெருமையுடன் உங்களுக்கு தெரிவிக்கிறோம்.

 இதுபோன்ற விஷயங்களில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் நிறுவனத் தலைவர் டாக்டர் அ. மாயவன் அவர்கள் தலைமையிலான சங்கம் என்றென்றும் உறுதுணையாக இருக்கிறது என்பதை அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் உணர வேண்டும் என்பதை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

 நன்றி 

*உங்கள் சேவைக்காக*
*என்றென்றும்* 

சாமி





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive